பருத்தித்துறையிலிருந்து புன்னாலைக்கட்டுவனூடாக யாழ்பாணத்துக்கு பஸ் சேவை

பருத்தித்துறையிலிருந்து புன்னாலைக்கட்டுவனூடாக யாழ்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (01) முதல் பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை சாலை முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி தெரிவித்தார். இந்த சேவையில் ஈடுபடும் பஸ்கள் பருத்தித்துறையிலிருந்து அச்சுவேலியூடாக புத்தூருக்குச் சென்று, புத்தூரூடாக புன்னாலைக்கட்டுவான் பின் பலாலி வீதியூடாக யாழ். பஸ் நிலையத்தை சென்றடையும். மேலும், 5 வருடங்களின் பின் இந்த பஸ் சேவை மீண்டும்...

வீதி விபத்தால் 43 பேர் மரணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வீதி விபத்தால் 43 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, சனிக்கிழமை (31) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் வீதி விபத்து காரணமாக 2,261 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஜூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்...
Ad Widget

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்தும் விமானம் வேண்டாம்: ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மட்டும் பயன்படுத்தும் உத்தியோகபூர்வமான விமானம் அடுத்த மாதம் இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 16மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இந்த விமானம் கொண்டுவரப்படவிருந்தது. இதன் இலங்கை பெறுமதி 208கோடி ரூபாவாகும். இதற்காக திறைச்சேரியின் ஊடாகவே பணம் செலுத்தப்படவிருந்தது. எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அந்த விமானக்கொள்வனவை நிறுத்தியதுடன் அந்த...

பாதுகாப்பு வலயத்தில் புதிய நீச்சல் தடாகத்தினை திறந்து வைத்தார் இராணுவத் தளபதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீச்சல் தடாகம் மற்றும் 'கிளப்' ஆகியன, இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவினால் கடந்த வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்துக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென வருகை தந்த இராணுவத் தளபதி தயாரத்னாயக்காவை, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் அல்விஸ் வரவேற்றார். இதன் பின்னர் வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள்...

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது!

வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்காலச் சுமைகளை அகற்றும், சுற்றாடலைச் சுத்தப்படுத்தும் காரியங்களில் எம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வது அவசியம், என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட சுற்றாடல் முன்னோடி பாசறை...

காஸ் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

காஸ் விலை குறைக்கப்பட்ட நிலையில் கொழும்புப் பகுதியில் 1596 ரூபாவாக விற்கப்படும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் 1808 ரூபாவாக விற்கப்படுகிறது. இவ்வாறு 212 ரூபா விலை அதிகரிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறித்து நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். மாவட்டங்களுக்கிடையே பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவது குறித்து விலைக்கட்டுப்பாட்டுச் சபை, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை...

யாழ். பல்கலைகழகத்தை அரசியல் நிறுவனமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தை அரசியல் சார்பான கல்வி நிறுவனமாக மாற்ற நாம் அனுமதிக்க மாட்டோம் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.தசிந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகவேண்டும் எனக்கோரி, வெள்ளிக்கிழமை (30) மதியம் 12 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால்...

வடக்கு ஆளுநர் விவகாரம்: கனடா வரவேற்பு

ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக இலங்கை அரசாங்கம் மீண்டும் நியமித்தமையை வரவேற்றுள்ள கனடா, வடக்கின் புதிய ஆளுநராக இராணுவப் பின்னணி இல்லாத சிவிலியன் ஒருவரை நியமித்தமையையும் வரவேற்றுள்ளது. இவை தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

 அடையாள வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகவேண்டும் எனக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்கராசா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை(30) மதியம் 12 மணி முதல் சனிக்கிழமை(31) மதியம் 12 மணி வரை மேற்கொள்ளப்படவிருந்த அடையாள...

பெப். 3ஆம் 4ஆம் திகதிகளில் தேசிய கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள்!

இலங்கையின் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் அனைத்திலும் தேசிய கொடியை ஏற்றுமாறு உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சு அரச நிறுவனத்தலைவர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறது. தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கௌரவிக்குமாறும் இலங்கையின் அனைத்து பிரஜைகளிடமும் அமைச்சு வேண்டுகோள்...

சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால், சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம்!

யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துகின்றது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12 மணிவரை நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீரழிந்த அரசியல் கலாச்சாரத்தால்,...

தமது வாழ்வாதாரத்தினை காப்பாற்றுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் ஐனாதிபதியிடம் கோரிக்கை!

வடமராட்சிகிழக்கில் மணல்ஏற்றும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கும் 1000 கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மணல் சேவையில் ஈடுபடும் வடமராட்சி கிழக்கு மக்கள் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக மணல் விநியோகத்தினையே தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கடந்த 5 வருடங்களாக...

ஓட்டோவை மோதியது தனியார் பஸ்: சம்பவ இடத்திலேயே இருவர் மரணம்!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஓட்டோ - தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பிரதான வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் இணையும் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே மரணமாகினர். இருவரும்...

புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரல்!

2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலமான இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 22 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தினூடாக கோரியுள்ளது. எனவே விண்ணப்பங்களை www.mohe.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பெற்றுக்...

மின்கட்டணத்தை செலுத்துமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தல்

இதுவரையில் மின்கட்டண நிலுவை செலுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய மின்கட்டண நிலுவையை சனிக்கிழமை (31)ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.பிரதேச பொறியியலாளர் ச.ஞானகணேசன் வெள்ளிக்கிழமை (30) கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குரிய மின்கட்டணத்தை...

யாழ்ப்பாணம் வரும் நிஷா பிஸ்வால்!

அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு...

முல்லைத்தீவில் இரு பிரதேச சபைகளுக்கு பெப்ரவரியில் தேர்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...

புதிய அரசாங்கத்தின் பட்ஜெட்டை வரவேற்கும் வடபகுதி மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன்படி, அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின்...

தலைமை நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவியேற்றார்

இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே. ஸ்ரீபவன் 1974 ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து...

பேக்கரி உற்பத்திபொருட்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கங்களும் குறைகின்றது!

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பது தொடர்பில் ஆராய்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கோதுமை மாவின் விலை 12 ரூபா 50 சதத்தினால் குறைக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கூறினார். இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்களை 10 சதவீதத்தாலும்,...
Loading posts...

All posts loaded

No more posts