Ad Widget

பேக்கரி உற்பத்திபொருட்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கங்களும் குறைகின்றது!

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பது தொடர்பில் ஆராய்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

sweet-tooth-fairy-bakery-5

புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கோதுமை மாவின் விலை 12 ரூபா 50 சதத்தினால் குறைக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்களை 10 சதவீதத்தாலும், பாடசாலை வான்களுக்கான கட்டணங்களை 5 வீதத்தாலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டண முறை பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts