Ad Widget

காஸ் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

காஸ் விலை குறைக்கப்பட்ட நிலையில் கொழும்புப் பகுதியில் 1596 ரூபாவாக விற்கப்படும் அதேவேளை யாழ்ப்பாணத்தில் 1808 ரூபாவாக விற்கப்படுகிறது. இவ்வாறு 212 ரூபா விலை அதிகரிப்பு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறித்து நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டங்களுக்கிடையே பொருள்களின் விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவது குறித்து விலைக்கட்டுப்பாட்டுச் சபை, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை என்பன கவனம் செலுத்தவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொருள்கள் விலை அதிகரிப்புச் செய்யப்படும்போது கடை உரிமையாளர்கள் சரியான தருணத்தில் அதனை பின்பற்றமுற்படும் அதேவேளை, பொருள்களுக்கு விலை குறைப்பு செய்யப்படும்போது, அதுகுறித்த தமக்கு இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என்றும், இந்த நிலைமைகளை சம்பந்தபட்ட தரப்பினர் உரியகாலத்தில் அவதானித்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் சிலவற்றுக்கு போக்குவரத்து செலவு அறவிடப்படுவதில்லை. ஆனால் காஸிற்கு மட்டும் ஏன் போக்குவரத்துச் செலவு என்று கூறி இடத்துக்கிடம் வேறுபட்ட விலைகளில் விற்கப்படுகிறது என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Posts