Ad Widget

தமது வாழ்வாதாரத்தினை காப்பாற்றுமாறு வடமராட்சி கிழக்கு மக்கள் ஐனாதிபதியிடம் கோரிக்கை!

வடமராட்சிகிழக்கில் மணல்ஏற்றும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கும் 1000 கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மணல் சேவையில் ஈடுபடும் வடமராட்சி கிழக்கு மக்கள் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

mft  4

இதன் போது கலந்து கொண்டவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக மணல் விநியோகத்தினையே தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கடந்த 5 வருடங்களாக மகேஸ்வரி நிதியம் அகழ்வு அனுமதியினை பெற்றபின் அவர்களுடன் இச் சேவையில் ஈடுபடுகின்றோம் ஆனால் தற்போது நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றத்தின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மகேஸ்வரி நிதியத்தினை அகற்றி வேறு நிறுவனத்தின் ஊடாக மணல் விநியோகத்தினை நடாத்த ஒழுங்குபடுத்தி தருவதாக கூறி தடுத்து நிறுத்தி வருகின்றது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாது வெறும் எதிர்ப்பு ஆர்பாட்டத்தினையே நடாத்தி வருகின்றது இதனால் எமது வாழ்க்கை செலவை கொண்டு செல்ல முடியாமல் மிகவும் கஸ்ரபடும் நிலையில் உள்ளதாகவும், லீசிங் இல் கொள்வனவு செய்த உழவு இயந்திரங்கள் பறிமுதலாகும் அபாயத்தில் உரிமையாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அன்றாடம் மணல் ஏற்றி உழைப்பவர்களும் சாரதிகளும் மிகவும் கஸ்ரத்திற்குள் உள்ளானதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

“அரசியல் பழிவாங்குதலிற்கு அப்பாவி மக்களை பலிக்கடாவாக்காதே”
“10 நாட்களில் வாழ்வாதாரம் தருவதாக கூறியவர்கள் எங்கே?”
“மணல் சேவையே எங்கள் வாழ்வாதாரம்”

என்ற பலகோச மட்டைகளுடன் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மகஐர் ஒன்றினை பருத்தித்துறை பிரதேச செயலரிடம் கையளித்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் மணல் விநியோகத்தினை நாம் தடுத்து நிறுத்தவில்லை தங்களின் கோரிக்கைகளினை உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார் .

Related Posts