Ad Widget

மக்களின் நிலங்களை மக்களுக்கே பெற்றுகொடுப்பேன் – டக்ளஸ்

‘எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கு சொந்தம். அந்தவகையில் ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த கணிசமான காணிகளை கமச்செய்கைக்காக பெற்றுக்கொடுத்துள்ளேன். எனவே மீதமிருக்கும் எமது மக்களின் நிலங்களையும் எம் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன். அதற்கு நானே பொறுப்பு’ என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

chavakacjhchy 4

சாவகச்சேரி தென்மராட்சி கலாசார மண்டபத்தில் கமத்தொழில்சார்ந்த மக்களுக்கான இழப்பீட்டு நிவாரணங்கள் மற்றும் மானிய அடிப்படையிலான விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சுதந்திரத்துக்கு பின்னரான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே எமது மக்கள் தொடர்பிலும் எமது பகுதிகள் தொடர்பில் செயற்பட்டிருந்தன.

எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, நாட்டின் ஏனைய பகுதிகளுடன் எமது பகுதியையும் எமது மக்களையும் சரிசமமாக நடத்தியதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் வாழ்வாதார மேம்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.

என்றாலும் எமக்கு இன்னும் பூர்த்தி செய்யப்படக்கூடிய தேவைகள் இருக்கின்றன. அவற்றை மாகாண சபை ஊடாகப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். ஆனால் அக்கறையும் திறனுமற்ற நபர்களது கைகளில் வடக்கு மாகாண சபை சிக்கிக் கொண்டிருப்பதால் அத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் தேவைகளாகவே நீடிக்கின்றன.

மத்திய அரசுடன் நாம் கொண்டுள்ள நடைமுறைசாத்தியமான இணக்க அரசியல் ஊடாக எமது மக்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை கணிசமானளவு பூர்த்தி செய்துள்ளோம். ஏனைய தேவைகளையும் நிச்சயமாகப் பூர்த்தி செய்வோம் என அவர் தெரிவித்தார்.

Related Posts