Ad Widget

கட்டுப்பாட்டை மீறினால் பதவி பறிக்கப்படும் – மாவை

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறுகின்றவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா அறிவித்துள்ளார்.

mavai mp in

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி நிரஞ்சன் கிருசாந்தி, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் நடராஜா நிரஞ்சன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கதிரேசு சுபாஸ்கரன், இராசையா ராஜசேகரம், பாக்கிய நாதன் பார்த்தீபன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாவியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு கட்சி தாவுவது தொடர்பில் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கட்சி தாவியவர்கள், வேறு வேறு தினங்களில் கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டு, கட்சி மாறியுள்ளனர். இவர்களுக்குரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகள் முடிவடைந்த கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளை மீறி நடக்கும், உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.

Related Posts