Ad Widget

யார் தடுத்தாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் – யாழில் ஜனாதிபதி

பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூடு இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்துவைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். 1970ஆம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது யாழ்ப்பாணம் வந்தேன். அதாவது 11 தடவைகள் நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன். உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரியுங்கள். – இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.

mahintha

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-

இன்று நான் உங்கள் முன் பேசுவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நான் சில நாள்களுக்கு முன்னர் யாழ்தேவி மூலம் யாழ்ப்பாணம் வந்தேன். இன்று யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இன்னும் எனது ஊருக்கு ரயில் சேவை இல்லை. ஆனால் வடபகுதிக்கு அந்த சேவையை நான் ஆரம்பித்துவைத்திருக்கிறேன். உங்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது.

பெரும் அபிவிருத்தியை நாம் முன்னெடுத்திருக்கிறோம். பிரதான வீதிகள் புகையிரதப் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்விக்கு ஊக்குவிப்பு வழங்குகின்றோம். இந்த நாட்டில் அகில இலங்கை ரீதியில் உங்கள் பிரதேச மாணவன் உயர்கல்வியில் கணிதத் துறையில் அதிகபுள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறான்.

அந்த மாணவன் முழு இலங்கையிலும் முதன்மையானவனாக உள்ளான். ஆனால் இன்று பொதுஎதிரணியினர் கல்வித்துறையை தனியார்மயப்படுத்த முற்படுகின்றனர். அப்படியானால் வறுமைப்பட்ட மக்கள் கல்விகற்க முடியாத அபாய நிலையே உருவாகும். குறிப்பாக பல்கைலைக்கழங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு பணஅறவீடு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எமது தலைமையின் கீழ் ஒருபோதும் கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது. நான் எனது தேர்தல் விஞ்ஞானபத்தில் வடக்குக்கு ஒன்று தெற்குக்கு ஒன்று என்று எதையும் குறிப்பிடவில்லை. எல்லாமக்களையும் சமமாக மதித்து அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகவே தேர்தல் விஞ்ஞானபம் முன்வைத்துள்ளேன்.

வடபகுதியில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உங்களுடைய பிரச்சினைகள் பற்றி என்னுடன் கலந்துரையாடுகின்றனர். அவர்கள் உங்களுக்காகக் குரல் கொடுக்கும் சிறந்த தலைவர்களாக உள்ளனர். எனவே நீங்கள் அவர்களை நம்புங்கள். இனப்பிரச்சினைகளுக்கு இரு தரப்பினரும் பேசி முடிவைத் தீர்மானிக்கமுடியும் பேச்சுவார்த்தைக் குழுவை நான் அமைத்தபோது அதற்குத் நாம் வரமாட்டோம் என்று சிலர் இருக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்யமுடியும்.

வடக்கு மாகாண சபைக்கு நான் ஒதுக்கிய நிதியில் 50 வீதம் கூடு செலவிடப்படவில்லை. பணத்தை செலவிடாது எப்படி அபிவிருத்தியைச் செய்யமுடியும்? இதைப்பற்றி மக்களாகிய நீங்கள் சிந்திக்கவேண்டும். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்த மாகாண சபைத் தேர்தலை நான் நடத்தினேன். நான் ஜனநாயகத்தின் பால் வைத்திருந்த நம்பிக்கையால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபையில் வெற்றிபெறும் என்று தெரிந்துகொண்டு தேர்தலை நடத்தினேன். அவர்கள் வெற்றிபெற்றார்கள். ஆனால் அவர்களால் எதுவுமே செய்யமுடியுவில்லை. செலவிடுவதற்கு பணம் வழங்கப்பட்டபோதும் அதைச் செலவிடத்தெரியாமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்தத் தெரியாமல் திண்டாடுகின்றனர்.

உங்களது தேவைக்காக கிளிநொச்சியிலிருந்து இரணைமடு தண்ணீரை முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கவில்லை. எனவே உங்களது தேவைகருத்தி அந்தத் தண்ணீரை நான் கட்டாயம் பெற்றுத் தருவேன். – என்றார்.

Related Posts