ஆங்கில செறிவூட்டல் பயிற்சி

அமெரிக்க தகவல் கூடத்தின் ஏற்பாட்டில் ஆங்கில செறிவூட்டல் 4 மாதகால பயிற்சி எதிர்வரும் 22ஆம் திகதி முதல் யாழ்.பொது நூலகத்தில் கற்பிக்கப்படவுள்ளதாக யாழ் அமெரிக்க தகவல் கூட அலுவலகம் புதன்கிழமை (07) தெரிவித்தது. ஜனவரி மாதம் 22ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ள இந்த பயிற்சிநெறியில் உயர்கல்வி கற்போரும் பாடசாலையை...

5 குடும்பங்களுக்கு காணி சுவீகரிப்பு கடிதங்கள் அனுப்பிவைப்பு

யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராம அலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும்...
Ad Widget

பாரிஸ் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

பாரிசில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தொிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தின்...

கள்ளவாக்கு போட முயற்சித்தால் தலையில் சுடவும் – மஹிந்த தேசப்பிரிய

வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

போலியான துண்டுப்பிரசுரங்களை நம்பி ஏமாறாமல் துணிச்சலுடன் வாக்களிக்கவும் – மாவை

தமிழர்களாகிய நாங்கள் மகிந்தவையும், மைத்திரியையும் நிராகரிப்போம்.தேர்தலைப் பகிஸ்கரிப்போம்.வாக்களிப்பை தவிர்ப்போம்.அல்லது எமது வாக்குகளைச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகப் பிரிவு என்று உரிமை கோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ்.குடாநாட்டில் பலபாகங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள்...

யாழில் சுறுசுறுப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு...

யாழ் மாவட்டத்திலும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். நாளையதினம (08) நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இன்று (07) யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது. வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும்...

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது – தேர்தல் ஆணையாளர்

மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை கவனத்திற் கொள்ள வேண்டாம் எனவும் அந்த உத்தரவினை உதாசீனம் செய்து வாக்களிப்பில் பங்கேற்குமாறு கோரியுள்ளார். எந்தவொரு பாதுகாப்பு காரணங்களையும் காட்டி படையினர் வாக்காளர்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்து முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த...

அரசாங்க பாடசாலைகளுக்கு இன்று முதல் 9வரை விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது. இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு...

யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்

யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ஆண்ட இனம் மீண்டும் ஆள மகிந்த ஜனாதிபதி ஆக வேண்டும், எமது உறவுகள் மீண்டும் புனர்வாழ்வு முகாம் செல்வதை தடுத்திடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு தொகுதி ஆவணங்கள் சிக்கின?

தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு ஆவணங்கள் பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக பொது எதிரணியினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். பண்டாரநாயக்கா சர்வதேச மண்டபத்திலிலுள்ள நான்கு அறைகள் பூட்டிய நிலையில் காணப்படுவதால் அதனை உடனடியாக திறக்குமாறு பொது எதிரணியினர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள்

ஜனாதிபதித் தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர்...

மக்கள் பாதுகாப்பாக வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதி செய்யுங்கள்!

மக்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதிப்படுத்துமாறும், அரச ஊடகங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுவதை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரசார நடவடிக்கைகளின்போது பல வன்முறைச் சம்பவங்களும், மிரட்டல்களும் இடம்பெற்றன என இலங்கையை சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள், வேட்பாளர்கள்,...

ரயில் வந்தபோதும் மூடப்படாத புகையிரத கடவை

ரயில் வந்த போதும் புகையிரதக் கடவை மூடப்பட்டாது இருந்த சம்பவம் யாழ். மீசாலை ஜயா கடையடி புகையிரதக் கடவையில் செவ்வாய்க்கிழமை (06) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. குடியிருப்பு வீதியிலிருந்து ஏ – 9 வீதிக்கு நுழையும் மேற்படி புகையிரதக் கடவை ரயில் வந்த போதும், மூடப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயணம் செய்துகொண்டிருக்கையில் சற்று தூரத்தில் ரயில் வந்துகொண்டிருந்ததையடுத்து...

அனந்தி வீட்டின் மீது கல்வீச்சு: சி.வி.கே கண்டனம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு சம்பவம் கண்டிக்கத்தக்கது என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பிரதிநிதியொருவரின் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தேர்தல் வன்முறைச் சம்பவமாகும். இது தொடர்பில்...

தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனத் தன்மையினை பாதுகாக்க கோரி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரசாங்கம் இராணுவ ஆக்கிரமிப்பினை செய்து வருவதுடன் தேர்தல் பிரசாரத்திகதி முடிவடைந்தும் ஜனாதிபதி தனது பிரசாரங்களை அரச ஊடகங்களூடாக பிரசுரிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நாளை...

தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பில் இராணுவத்தையும் அழைக்கும் சாத்தியம்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 71,100 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக பாதுகாப்பு பணிகள் தொடர்பில் இராணுவத்தினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இதன் பொருட்டு இராணுவப் படையணி தயார் நிலையில் உள்ளதுடன் இராணுவ படையணியை கடமைக்கு அழைக்கும் அதிகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைக்கு பொலிஸாரே முற்று முழுதான...

வெளிநாட்டவர்களின் கண்காணிப்பில் வடக்கு

எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் நேற்று (06) வடக்கிற்கு விஜயம் செய்து பணிகளை ஆரம்பித்துள்ளனர். வவுனியா தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திரவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் இந்த சந்திப்பின்...

கடந்தகால வரலாற்றை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களியுங்கள் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

தமிழ் மக்கள் அனைவரும் கடந்த கால வரலாறுகளைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. நாளை தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தநிலையிலேயே யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளது. ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின்...

யாழ். இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவர்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவராக ஏ.நடராஜன் பதவியேற்றுள்ளார். யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவராக கடமையாற்றிய வி. மகாலிங்கம் மாற்றலாகிச் சென்றுள்ளார். அந்தநிலையில் கண்டியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு தூதுவராக கடமையாற்றிய ஏ.நடராஜ் தனது கடமைகளை நேற்று முதல் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முன்னாள் தூதுவர் வி.மகாலிங்கம் மாற்றாகிச் சென்றதையடுத்து பதில் தூதுவராக இதுவரை காலமும் தட்சணாமூர்த்தி...
Loading posts...

All posts loaded

No more posts