Ad Widget

அரசாங்க பாடசாலைகளுக்கு இன்று முதல் 9வரை விடுமுறை

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சகல அரசாங்க பாடசாலைகளும் இன்று (07) முதல் எதிர்வரும் 09 ம் திகதி வரை மூன்று தினங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு பின்னர் 12ம் திகதியன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்தது.

இதேவேளை புனித பாப்பரசரின் வருகையையொட்டி பாதுகாப்பு கடமை களுக்காக கொழும்பு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட வசதி கருதி தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் ஜனவரி 11ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் மூடப்பட்டு பின்னர் 16ம் திகதியன்று கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்தது.

புனித பாப்பரசரின் வருகையையொட்டி இந்தத் தினங்களில் றோயல் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பெண்கள் வித்தியாலயம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, சென். ஜோசப் ஆண்கள் வித்தியாலயம், கிரேண்ட்பாஸ் சென்.அந்தனிஸ் வித்தியாலயம், அல் அஸார் வித்தியாலயம், புளுமெண்டல் தமிழ் வித்தியாலயம், மருதானை ஆனந்தாக் கல்லூரி, அசோக்கா வித்தியாலயம் உள்ளிட்ட கொழும்பிலுள்ள 43 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

இதேவேளை க.பொ.த. சாதாணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் 83 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts