Ad Widget

யாழ் மாவட்டத்திலும் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

election

நாளையதினம (08) நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் இன்று (07) யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகளின் தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் கேந்திர நிலையமான யாழ் மத்திய கல்லூரி வளாகத்திலிருந்து மாவட்டம் முழுதிவதிலுமுள்ள 526 வாக்குச்சாவடிகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டது.

நாளையதினம் அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தவிர்க்கும் முகமாகவும் வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமுகமாகவும் 2000 மேற்பட்ட பொலிஸார் மாவட்டம் முழுவதிலுமுள்ள வாக்குச்சாவடிகளிலும் வாக்குகள் எண்ணும் இடங்களிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்முறை 5000 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் பணிகளுக்கென அமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகள் யாவும் யாழ் மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. நாளையதினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க யாழ் மாவட்டத்தில் நான்கு லட்சத்து ஐம்பதாயிரத்து நூற்றுமுப்பத்தி இரண்டு பேர் (450.132) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 44 வாக்கெண்ணும் நிலையங்களில் நளையதினம் இடம்பெறவுள்ளது.

இதில் 8 வாக்கெண்ணும் நிலையங்களில் தபால் வாக்குகளும் மிகுதி 36 வாக்கெண்ணும் நிலையங்களிலும் பிரதான வாக்குகளும் எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

Related Posts