- Saturday
- August 9th, 2025

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சகருமான சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஜனாதிபதித் தேர்தலுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக டிசெம்பர் 3ஆம் திகதி வரை...

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு சமுர்த்தி பயனாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கபே அமைப்பு தெரிவித்தது. ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் பிரசாரக்கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தேர்தல் கூட்டங்களுக்கு சமுர்த்தி பயனாளிகள் வராவிட்டால் எதிர்காலத்தில் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது எனக்கூறி அழைத்தமை தொடர்பில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்குட்பட்ட வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் இருவர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு தாவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், தாங்கள் அவ்வாறு செயற்படவில்லை என நகரசபை உறுப்பினர்களான ஜெ.ஜெயராஜா, எம்.மயூரன் ஆகிய இருவரும் விளக்கமளித்தனர். நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு எங்கும் செல்லமாட்டோம் எனக் கூறிய ஜெ.ஜெயராஜா,...

யாழ்.கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதில் ஐஸ் தொழிற்சாலை நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கூறி நேற்று திங்கட்கிழமை (05) மாலையிலிருந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 80 ஊழியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில் 12 ஊழியர்கள் மட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தங்களுக்கு...

மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் என விநியோகிக்கப்பட்ட போலி வாக்குச்சீட்டுக்களை தங்களுடைய நீலப்படையணி விநியோகிக்கவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் செவ்வாய்க்கிழமை (06) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முச்சக்கரவண்டி சின்னத்தில் போட்டியிடுகின்றார் எனக்குறிப்பிட்டு, போலி வாக்குச்சீட்டுக்கள் திங்கட்கிழமை (05) யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டுகோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். பண்ணாகத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர், வெளியில் வந்து பார்த்த போது உயரமான கோர்ட் அணிந்த ஒருவர் வீட்டுக்கு அருகிலிருந்து...

வீட்டிலில்லாமை மற்றும் வேறு ஏதேனும் காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் எஞ்சியுள்ள நாட்களில் தமது பிரதேசத்திற்குப் பொறுப்பான தபால் நிலையங்களுக்கு நேரில் சென்று அடையாளத்தை உறுதிசெய்து அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் ரோஹண அபயரட்ன தெரிவித்தார். வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்ட தினத் தன்று அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டிலில்லாமை அல்லது தபாலில் ஏற்பட்டிருந்த ஏதேனும்...

"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபாலவின் சின்னம் 'அன்னம்' ஆகும். எனவே, மஹிந்த அரசின் போலிப் பிரசாரங்களை நம்பாது நாளை மறுதினம் 8 ஆம் திகதி மைத்திரியின் 'அன்னம்' சின்னத்திற்கு அனைத்து தமிழ் பேசும் வாக்காளர்களும் தமது பொன்னான வாக்குகளை அளித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு தனியார் பஸ்கள் மற்றும் போக்குவரத்துச் சபை பேருந்துகள் என 191 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் 63 பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் தெரிவித்தார். பருத்தித்துறை சாலையிலிருந்து 10 பேருந்துகளும், காரைநகர் சாலையிலிருந்து 10...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற ரயில் சேவை கடந்த 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டதையடுத்து புதிய ரயில் சேவை அட்டவணையை யாழ். பிரதம புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் திங்கட்கிழமை (05) வெளியிட்டார். குளிரூட்டிய கடுகதி ரயில் காலை 5.50 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு 11.56 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும் ரயில், யாழ்ப்பாணத்திலிருந்து...

நாட்டில் ஜனநாயக சூழலை ஏற்படுத்த மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்குமாறு அடக்குமுறைகளுக்கெதிரான அமைப்பின் தலைவர் முத்தையாப்பிள்ளை தம்பிராசா, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தமிழ் பேசும் மக்கள் அனைவரும்...

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு 2015 ஜனவரி மாதம் 6ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் மறுஅறிவித்தல் வரை யாழ். நகரப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகள் மூடப்பட்டிருக்கும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்யலங்கார, திங்கட்கிழமை (05) தெரிவித்தார். காந்தி வீதி,...

யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த...

'பிரபாகரனை நான் 'மிஸ்டர் பிரபாகரன்' என்று சொன்னதாக எனக்கு எதிராக சேறு பூசுகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் பிரபாகரனை 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறியிருக்கின்றார். அவரது உத்தியோகபூர்வ இணையதளத்திலும் அவ்வாறே காணப்படுகின்றது' என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய...

தேர்தல் வன்முறைகள் கட்டுமீறிப் போகுமிடங்களில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை (05) தெரிவித்தார். நேற்று அவசரமாகக் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த இரண்டு நாட்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. இந்தப் போக்கை கண்டிப்பதுடன் இது மிகவும் மோசமான வன்முறையாகும்'...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற விதத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐக்கிய மக்கள் சுதந்திரக்...

'எனது நிர்வாகத்தின் ஆரம்பகட்ட வேலைகளில் அதிகார பரவலாக்கலுக்கு இடமில்லை. சமூக மற்றும் அரசியல் மீள்கட்டுமான நடவடிக்கைகளே எனது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முதலில் முன்னெடுக்கப்படவுள்ளன. எனது இந்த யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது' என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'இந்த நாட்டை துண்டாக்கவோ அல்லது பகிர்ந்தளிக்கவோ நானும்...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ்....

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீதும் சிறுவர்களின் மாமன் மீதும் படைச்சிப்பாய் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் குறித்த இரு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த சிறுவர்களின் தயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாலை 3.30 மணியளவில்...

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று முன்தினம் (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும்...

All posts loaded
No more posts