Ad Widget

ஜனாதிபதித் தேர்தலை நீதியானதொரு தேர்தலாக நடாத்த சகல தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியம் – அரச அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது எனவே நீதியானதொரு தேர்தலை நடாத்த சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

dak-suntharam-arumainayagam-GA

எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளன. அந்தவகையில் யாழ். மாவட்டத்திலும் அதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் உள்ளது.

தேர்தல் நிலவரம் தொடர்பில் அரச அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகும் நிலையை எட்டியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 4இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதுடன் 526 வாக்களிப்பு நிலையங்களிலும் தங்கள் வாக்குகளை அளிக்கவுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் 5000 உத்தியோகத்தர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் கவனத்தை செலுத்தியுள்ளனர்.

இம்முறையும் வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 44 வாக்கெண்ணும் நிலையங்கள் அமையப்பெறுவதுடன் அவற்றில் 2000 பேர் கடமையாற்றவுள்ளனர்.

மேலும் தேர்தலை சுமுகமாகவும் அமைதியாகவும் நடாத்துவதற்கு போட்டியிடும் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts