Ad Widget

மைத்திரிக்கு த.தே.கூ நிபந்தனையற்ற ஆதரவு – அங்கஜன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற விதத்தில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

aygajan-ramanathan

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இனவாதக் கட்சிகள் இதுவரை காலமும் அங்கம் வகித்தமையால் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இராணுவ ஆக்கிரப்பு தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க முடியவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வென்றால் தமிழ் மக்களின் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கதைத்து தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், தேசிய பாதுகாப்புக்கு ஏற்ற அளவில் இராணுவத்தினரை வடக்கில் இருக்கவிட்டு, மிகுதி இராணுவத்தினரை இங்கிருந்து வெளியேற்றவும் முடியும்’ என்றார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எதிர்த்தரப்புக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றது. மக்கள் தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தீர்மானத்தை விட தாங்களாக சுயமாகச் சிந்தித்து இம்முறை வாக்களிப்பார்கள். இதுவரை காலமும் கோபம் உணர்ச்சிகளுக்காக வாக்களித்த மக்கள், இம்முறை உரிமையுடன் சுதந்திரமாக வாக்களிப்பார்கள்.

அரசியல் கைதிகளின் விடுதலை நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயம் என்பதனால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க முடியும்’ என்றார்.

‘அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதியில் பிரச்சாரக் கூட்டத்தில் எங்களில் நீலப்படையினர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியமை என்று கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. நாங்கள் தாக்குதல் நடத்தமாட்டோம். ஏனெனில் நாங்கள் படித்தவர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மாறுகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தால் வடக்கு மக்கள் அபிவிருத்திகளை பெற்றனர். இனியும் அந்த அரசாங்கத்தின் மூலமே அபிவிருத்திகளைப் பெறமுடியும்’ என அவர் தெரிவித்தார்.

Related Posts