Ad Widget

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்கலாம்

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் தகுந்த ஆவணங்களுடன் சென்று வாக்களிக்க முடியும் என யாழ்.மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சகருமான சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (6) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதித் தேர்தலுக்கு கடந்த மாதம் 20 ஆம் திகதியில் இருந்து வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக டிசெம்பர் 3ஆம் திகதி வரை வாக்குச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டது.

இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அந்தந்த பகுதிக்குரிய அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை” என வாக்களிக்காமல் இருக்க வேண்டாம்’ என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதோர் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள வசதி

Related Posts