ஐஸ் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

யாழ்.கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்குவதில் ஐஸ் தொழிற்சாலை நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக கூறி நேற்று திங்கட்கிழமை (05) மாலையிலிருந்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Ice-factrey

யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் 80 ஊழியர்கள் பணியாற்றவேண்டிய நிலையில் 12 ஊழியர்கள் மட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் தங்களுக்கு வேலைச்சுமை அதிகம் எனக்கூறிய ஊழியர்கள், தங்களுக்கான அடிப்படைச் சம்பளம் 9 ஆயிரம் ரூபாய் தொகைக்கும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.

தங்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, மேலதிக படிகள் போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லையென்றும் பணிபுரியும்போது தேவைப்படும் கையுறைகள், தலைக்கவசம், பாதுகாப்பு உடைகள் ஆகியனவும் வழங்கப்படவில்லையென ஊழியர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

தொழிற்சாலைக்கு ஐஸ் ஏற்றுவதற்காக செல்லும் வாகனங்களையும் தடுத்து வைத்து ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமையும் (6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Posts