- Friday
- August 1st, 2025

வடக்கு, கிழக்குக்கு கொண்டு செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டிருந்த சில பொருட்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதுடன் சில பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்துக்கு யுத்த உபகரணங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு...

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாகவே இந்த பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், பஸ்ஸில் 36 பயணிகள் இருந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவத்தில் எவருக்கும்...

புதிய அமைச்சரவையில் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களின் போது இணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று நம்பகரமாகத் தெரியவருகிறது. இதுவரை காலமும் இணைத்தலைவராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பதவியைத் தொடர முடியாத நிலையில் அந்தப் பதவியை பிரதி அமைச்சர்...

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் தெரிவித்தார். அத்துடன், ஆட்சி அமைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடனும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்....

வடக்கு மாகாணத்திற்கு இராணுவ பின்புலம் இல்லாத சிவிலியன் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை வரவேற்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவரின் எதிர்காலச் செயற்பாடுகள் மாகாணத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனூடாக மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி மாகாண சபையையும் சிறந்த முறையில் இயங்குகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் வட மாகாண...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உருவாகியுள்ள புதிய அரசாங்கத்திடம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் காரணமாக இலங்கைக்கு வரமுடியால் வெளிநாடுகளில் இருப்பவர்கள், இலங்கைக்கு வந்து செல்வதற்கான அனுமதி உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைப்பதாக யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார். யாழ். வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்...

பருத்தித்துறை நீதிமன்ற சட்டத்தரணி திருமதி உருத்திரேஸ்வரன் விஜயராணி என்பவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை (16) இரவு 8 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று வாள்களுடன் நுழைந்து அட்டகாசம் புரிய முயற்சித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, அந்தக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். பருத்தித்துறை வல்லிபுரம் பரியாரி ஒழுங்கையில் அமைந்துள்ள சட்டத்தரணியின் வீட்டுக்குள் வாள்களுடன்...

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார். கவிஞர் கு.வீராவின் 'கண்ணடிக்கும்காலம்', 'இரண்டாவது உயிர்' எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில்...

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படும் இலங்கை மின்சார சபையின் நொர்தேன் பவர் நிறுவனத்துக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தல் தொடர்பான கட்டளையை உருவாக்குதல் தொடர்பில், எதிர்வரும் 27ஆம் திகதி கூறப்படும் என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், கூறினார். கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்படுவது குறித்து பாதிக்கப்பட்ட 11...

றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலைக்கு பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள குறித்த களஞ்சியசாலையானது,...

யாழ்.மாவட்ட பராவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்திற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள். கடந்த காலத்தில் மணல் ஏற்றிப் பறிப்பதற்காக வைப்புப் பணமாக ஒவ்வொரு லொறி உரிமையாளரும் ஒரு பாரவூர்திக்கு ஐயாயிரம் ரூபா வைப்புச் செய்ய வேண்டும் என்றும் அந்த பணத்தைப் வைப்புச் செய்யும் பாரவூர்த்திக்கே மணல ஏற்றிப்...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இடங்களும் கூட அதிகரித்துள்ளன. கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார். நேற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறு தொடரும்...

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று அதிகாலை 01.00 மணியளவில் ஸ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல்.306 வகை விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் ஐ.தே.கட்சியிலிருந்து விலகி மகிந்த அரசுடன் இணைந்து 21 நாட்கள் சுகாதார அமைசாராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடுக்குளத் திட்டத்தின் நோக்கம், கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாத்திரம் அல்ல. யாழ்ப்பாணத்துக்கான உணவுப்பாதுகாப்பும் இரணைமடுக் குளத்திலேயே தங்கியுள்ளது. இதனால்தான், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் எடுத்து வரும் மத்திய அரசின் திட்டத்துக்குப் பதிலாக நாம் மாற்றுத் திட்டத்தை முன்வைக்க நேர்ந்தது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இரணைமடுக்குளத்தின் 95ஆவது...

ரயில் கடவை மூடப்பட்டிருந்தபோது, கடவையைக் கடந்தவருக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம், வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார். யாழ். கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பான வீதிக்கடவை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி மூடியிருந்த போது பாலாவி பகுதியை சேர்ந்த நபர் கடவையை கடந்து...

கழிவு எண்ணெய் கிணறுகளில் பாதிக்கப்பட்ட வலி.வடக்குப் பிரதேச மக்கள் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் சுன்னாகம் மின் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள 'நொதேர்ன் பவர்' அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில் பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய்...

காரைநகர் பிரதேசசபை தலைவர் ஆணைமுகன் தாக்கியதில் பெண் செயலாளரின் சின்னி விரல் முறிந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், செயலாளரான காசிநாதன் கேதீஸ்வரி (வயது 59) என்பவரே காயமடைந்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆணைமுகனின் நண்பரான வீரசிங்கம் என்பவருக்கு கல்...

சீனாவின் உதவியுடன் கொழும்பில் உருவாக்கப்படும் துறைமுக நகரம் குறித்து இலங்கையின் புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யவுள்ளதாக 'ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்று சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவில் அமைத்து வரும் இந்தத் துறைமுக நகரம் அமைக்கப்படுகின்றது. இதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தத் துறைமுக நகரத்தினால்...

வடக்கு ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டுவந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளவை வருமாறு:- வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறியை மாற்றுமாறு நாம் முன்னைய அரசிடம் பலதடவைகள்...

வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபார சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்தக் கட்டுப்பபாடு நீக்கப்பட்டது. வடக்குக்கு வரும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

All posts loaded
No more posts