காரைநகர் பிரதேசசபை தலைவர் ஆணைமுகன் தாக்கியதில் பெண் செயலாளரின் சின்னி விரல் முறிந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், செயலாளரான காசிநாதன் கேதீஸ்வரி (வயது 59) என்பவரே காயமடைந்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைநகர் பிரதேச சபை தலைவர் ஆணைமுகனின் நண்பரான வீரசிங்கம் என்பவருக்கு கல் உடைக்கும் ரோலர் இயந்திரத்தினை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனை எழுத்து மூலம் தருமாறு செயலாளர் தலைவரிடம் கோரிய போது, தகாத வார்த்தைகளினால் பேசியதுடன், கையில் இருந்த பொருளினால் அவரின் கைமீது தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்தவர் காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.