யாழ்.மாவட்ட பராவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட மகேஸ்வரி நிதியத்திற்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.
கடந்த காலத்தில் மணல் ஏற்றிப் பறிப்பதற்காக வைப்புப் பணமாக ஒவ்வொரு லொறி உரிமையாளரும் ஒரு பாரவூர்திக்கு ஐயாயிரம் ரூபா வைப்புச் செய்ய வேண்டும் என்றும் அந்த பணத்தைப் வைப்புச் செய்யும் பாரவூர்த்திக்கே மணல ஏற்றிப் பறிக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும் கூறி சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட பாரவூர்தி உரிமையாளர்களிடம பணம் பெறப்பட்டு இருந்தது.
இதனைவிட ஒரு பாரவூர்தி மணல் ஏற்றி பறிக்கும் சந்தர்ப்பத்தில பாரவூர்திகளின் உரிமையாளர்களின் சேமிப்புப் பணமாக முந்னூறு ரூபாவும் அறவிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த பல வருடங்களாக மணல் ஏற்றி இறக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாததுடன் குறிப்பிட்ட பணமும் மீளக்கையளிக்கப்படவில்லை.
இதையடுத்து தற்போது குறிப்பிட்ட பணத்தை தமக்கு வட்டியுடன் வழங்கவேண்டும் எனக் கோரி மகேஸ்வரி நிதியத்துக்கு யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.