மைத்திரிபால சிறிசேன எம்பி பதவியில் இருந்து இராஜினாமா

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...

 பீ.எம்.ஐ.சி.எச்.இல் களஞ்சியப்பட்டிருந்த ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள 'ரக்ன லங்கா' எனப்படும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையில் குளறுபடி காணப்படுவதால், அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி நிறுவனத்துக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். மேற்படி களஞ்சியசாலையிலுள்ள 23 கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது...
Ad Widget

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். காரைநகர் சுற்றுலாத்துறை பயிற்சி அதிகாரசபை மையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியலுக்கு வர முன்னமே வடகிழக்கு மாகாணங்களில்...

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துங்கள் – மகிந்த

அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வழிபாடுகளில் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1931 ஆம் ஆண்டில் இருந்து அரசியல் செய்யும் எங்களுடைய வீட்டில் முதல் தடவையாக சோதனை நடத்தப்பட்டுள்ளது....

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு வருவாரா மைத்திரி?

யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றோம் ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. எனினும் இந்தக் கண்காட்சிக்கு ஜனாதிபதி வருகை தராவிட்டாலும் புதிய அரசின் அமைச்சர்களில் ஒருவர் வருகை தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக வர்த்தக தொழில் துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார்....

மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல்: ரனில் விக்ரமசிங்க உறுதி

இலங்கையின் புதிய பிரதமர், ரனில் விக்ரமசிங்க, அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரப் பகிர்வை விஸ்தரிக்கப் போவதாக உறுதியளித்திருக்கிறார். சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்ட விரிசல் சுமார் 30 ஆண்டுகால உள்நாட்டுப்போராக வழிவகுத்ததற்கு ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வாக அவர் தமிழ் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்கும் இந்த அதிகாரப் பரவலை விஸ்தரிக்கப்...

இனவாதத்தை மறந்து பிரச்சினை தீர்க்க பிரதமர் அழைப்பு: 26ல் பட்ஜெட்!

இனவாதத்தை கைவிட்டு அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வு இன்று (20) இடம்பெற்ற வேளை விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். எதிர்வரும் 26ம் திகதி...

மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்கு சிறப்புரிமை அட்டை அறிமுகம்!

யாழ். மாநகர சபையினால் குறித்த காலப்பகுதியினுள் மதிப்பீட்டு வரி செலுத்துபவர்களுக்காக சிறப்புரிமை அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்அட்டையானது கடந்த 3 வருடங்களில் ஜனவரி மாதத்திற்குள் மதிப்பீட்டு வரிகளைச் செலுத்தி நகர அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் வாழும் பிரஜைகளுக்கு உரித்தானது. அதாவது குறித்த வருடத்திற்குரிய சோலைவரி கொடுப்பனவினை அந்த வருடம் ஜனவரி மாதம்...

வட மாகண பிரதம செயலாளராக பத்திநாதன் நியமனம்

வடமாகாகண சபையின் பிரதம செயலாளராக முல்லைத்தவு மற்றும் மொனாறாகலை ஆகிய மாவட்டங்களில் முன்னர் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அ.பத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக முன்னர் கடமையாற்றி வந்த திருமதி.விஜயலட்சுமி றமேஸ் இச்சபையின் நிர்வாகச்செயற்பாடுகளுக்கு தடையாக இருந்துவருவதாக முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் ஏனைய உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி வந்த நிலையில் தற்பொழுது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால்...

இலங்கையில் தொடர்வண்டிகளில் தமிழ் படும் பாடு

மின்சார உற்பத்தி நிலையத்தினை மூடும்படி கோரி வைத்தியர்கள் உண்ணாவிரதம்!

இலங்கை மின்சார சபையின் நொதேன் பவர் என்னும் தனியார் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் கழிவு ஓயில் சுன்னாகம் பகுதியையும் தாண்டி வேறு பகுதிகளுக்கும் பரவிவரும் நிலையில் இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கோரி மருத்துவர்கள் சிலர் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பருத்தித்துறைப் பிரதேசத்துக்கு ஒயில் வருவதைத் தடுக்கும் முகமாக பருத்தித்துறை வைத்திய அதிகாரி டாக்டர்...

யாழ். பல்கலையின் வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் வெளியேறாவிட்டால் பாரிய போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் 14 பேரும் தாமாக வெளியேற வேண்டும். அவர்களை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் தாமாக வெளியேறாவிடின் யாழ். பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க உப தலைவர் சி.கலாராஜ் செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்தார். பல்கலைக்கழக வெளிவாரி...

தமிழ் கைதிகளின் பெயர் விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு – மனோ

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விவரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கும்படி தான் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் இந்த...

விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? விசாரணைகள் ஆரம்பம்!

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது....

நாம் அரசுக்கு ஒன்றையும் மக்களுக்கு இன்னொன்றையும் கூறும் அரசியல் பச்சோந்திகளல்ல

“நாம் அரசுக்கு ஒன்றையும் மக்களுக்கு இன்னொன்றையும் கூறும் அரசியல் பச்சோந்திகளல்ல“ என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அவ்செய்திக் குறிப்பு முழுமையாக வருமாறு... தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை வென்றெடுக்கும் எமது யதார்த்த அரசியல் பயணமானது இன்று...

த.தே.கூ உறுப்பினர்களிடம் விசாரணை

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களை யாழ்ப்பாண பொலிஸார் அழைத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன்,...

மரணப்படை ஒன்றின் தலைவர் கோத்தா?

மரணப்படையொன்றின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச செயற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலைசெய்யுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச இயக்கி வந்த மரணப்படைக்கு அவரே உத்தரவிட்டார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...

வடமாகாண முன்னாள் ஆளுநரின் கீழிருந்த பணிகள் மாற்றம்

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில், வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169 மில்லியன் ரூபாய் ஆக இருந்த...

உள்ளூராட்சி மன்ற நியமனங்களில் முறைகேடு

உள்ளுராட்சி மன்ற நியமனங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் வடமாகாண சபையில் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றபோதே, சுகிர்தன் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், அண்மையில் வழங்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின்...

சிவாஜிலிங்கத்தின் பிரேரணை அடுத்த அமர்வில்

வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பிரேரணை பெப்ரவரி 10 ஆம் திகதி சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, 'வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை...
Loading posts...

All posts loaded

No more posts