Ad Widget

வாழைக்குலை வியாபாரி வீதியில் விழுந்து மரணம்

சாவகச்சேரி சந்தையில் வாழைக்குலை வியாபாரம் செய்யும் வியாபாரியொருவர், புதன்கிழமை (11) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக திடீரென விழுந்து மரணமாகினார்.

கைதடி மத்தி குமரன் நகரைச் சேர்ந்த சி.சின்னத்தம்பி (வயது 57) என்பவரே இவ்வாறு மரணமடைந்தார்.

வீட்டிலிருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டிக்கொண்டு சந்தைக்குச் சென்ற இவர், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக கீழே வீழ்ந்து மரணமானார்.

இவரது சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts