Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

2015 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பெப்ரவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் ஜனாநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3000 ரூபாவுக்கு மேலதிகமாக 2015 பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 5000 ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட உள்ளது.

அரச தரப்பு ஊழியர்களுக்கு வழங்குவதாக வாக்களிக்கப்பட்ட 10,000 மேலதிக கொடுப்பனவில் எஞ்சிய 2000 ரூபாவை 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இதுவரை வழங்கி வந்த 2500 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 1000 ரூபாவினை சேர்த்து மொத்தமாக 3500 ரூபா ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts