Ad Widget

அரச ஊழியர்களின் சம்பளம் இம்மாதம் முதல் அதிகரிப்பு

2015 ஆம் ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று பெப்ரவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளில் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் ஜனாநாயக நிர்வாகம் தொடர்பான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அரச சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு...

புதிய அரசாங்கத்தின் பட்ஜெட்டை வரவேற்கும் வடபகுதி மக்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன்படி, அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின்...
Ad Widget

2015 வரவுசெலவு ஒரே பார்வையில்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு... அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும். இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

மா, சீனி உள்ளிட்ட 13 பொருள்களின் விலை குறைப்பு

மா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:- சீனி - 10 ரூபாவாலும் - 400 கிராம் பால் மா - 325 ரூபாவாகவும் சஸ்டஜன்...

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு 6% நிதி, மண்ணெண்னை மேலும் 6 ரூபாவால் குறைப்பு

இலங்கையின் கல்வித் துறைக்கு தேசிய வருமானத்தில் 6% நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மண்ணெண்னை லீட்டருக்கு மேலும் 6 ரூபா குறைக்கப்படும் என்றும் அதன்படி 59 ரூபாவிற்கு மண்ணெண்னை ஒரு லீட்டர் கொள்வனவு செய்ய முடியும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

பா.உறுப்பினர்களுக்கான பரவலாக்கப்பட்ட நிதி 50% உயர்வு

விவசாயிகளுக்கு தொடர்ந்தும் உர மானியம் வழங்கப்படும் என்றும் உலர்ந்த பால் ஒரு லீட்டர் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பரவலாக்கப்பட்ட நிதி 5 மில்லியனில் இருந்து 10 மில்லியன்வரை அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் 1000 அதிகரிப்பு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20,000 கொடுப்பனவு

ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 20,000 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடனில் 50% குறைப்பு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ்! மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் புதிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இலங்கையில் இருந்து...

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு

தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனியார் நிறுவன உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் ஊழியர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு கடுமையாக பாடுபடுவதா அவர் குறிப்பிட்டுள்ளார்