Ad Widget

2015 வரவுசெலவு ஒரே பார்வையில்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு…

budjet-2015

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும். இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய சம்பள அதிகரிப்பாகும்.

இதேவேளை GSP+ சலுகையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இச்சலுகை நிறுத்தப்பட்டமையினால் இலங்கைக்கு மாதாந்தம் 5000 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டமேற்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓய்வூதியம் 1000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. சமுர்தி கொடுப்பனவு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் 200 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்கான வட்டி வீதத்தை ஒரு மில்லியனாக அதிகரித்து அதற்கான வட்டி வீதத்தை 15 வீதமாக வழங்கப்படும்.

இலத்திரனியல் அட்டைகளினூடாக சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன் பிறக்கும் பிள்ளைகளுக்கு 20,000 ரூபா உடனடியாக வழங்க நடவடிக்கை.

விவசாயக் கடன் சலுகையாக வணிகக் கடன் அதிகூடியது ஒரு லட்சமாகவும் வரி 50 வீதமாக குறைக்கப்படும்.

தாவர வகை – நெல் போன்றவற்றுக்கான விலை கீழ்வருமாறு

நெல் – 50.00, கிழங்கு 80.00, தேயிலைக் கொழுந்து 80.00, றப்பர் 350.00

தற்போதுள்ள பசளைக்கான சலுகை விலை தொடர்ந்தும் வழங்கப்படும்

பால் ஒரு லீட்டரின் விலை 60ரூபாவிலிருந்து 70 ரூபாவாக எதிர்வரும் ஜூலை மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படும்

ஊழல் மிகு தேசத்துக்கு மகுடம் திட்டத்திற்கான 3400 கோடி ரூபா நிறுத்தப்படும்.

மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவு 24 மணிநேரமும் இயங்கும்

சிறுநீரக நோயளர்களுக்கான கொடுப்பனவு தொடர்ந்தும் வழங்கப்படும்.

கல்விக்கான செலவு தேசிய வருமானத்தில் 6 வீதமாக அதிகாரிக்கப்படும்.

வாழ்க்கைச் செலவு கீழ்வருமாறு குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெயின் விலை முன்னர் குறைக்கப்பட்ட விலையை விடவு குறைக்கப்பட்டு 59 ரூபாவாக விற்கப்படும்.

13 அத்தியவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சீனி ஒரு கிலோவின் விலை10.00 ரூபாவால் குறைப்பு
400 கிராம் பால்மாவின் அதிகூடிய சில்லறை விலை 325.00
கோதுமை மாவின் விலை 2.50.00 குறைப்பு
பாண்- 6.00 குறைப்பு
நெத்தலி கருவாடு 15.00
ஒரு கிலோ பாசிப்பயறு 30.00
டின்மீன் விலை 60 .00
கொத்தமல்லிக்கான விஷேட பண்ட வரி 30 ரூபாவால் குறையும்.
ஒரு கிலோ உழுந்து 60.00
சமையல் எரிவாயு 300.00
ஒரு கிலோ மாசி கிலோ 200.00 ரூபாவால் குறைப்பு.

அரசவங்கிகளில் 2லட்சம் ரூபாவுக்கு மேல் நகை அடகு வைத்திருப்பவர்களுக்கான வரி தள்ளுபடி.
அதிசொகுசுவாய்ந்த வீடுகளுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் ரூபாய் இல்ல வரி.
இலங்கை பிரஜாவுரிமையை கைவிட்டு செல்கின்றவர்கள் கொண்டுசெல்லும் பணத்துக்கு 20 சதவீதம் வரி.
சொகுசு வீடுகளுக்கு ஒரு தடவை மட்டும் வரி அறவிடப்படும்.
2,000 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலாக வருமானம் பெறுவோருக்கு 20 சதவீதம் வரி.
உற்பத்தியின் போது செலுத்தப்படும் ஆகக்குறைந்த வரிமட்டம் 750,000 வரை உயர்த்தப்படும்.
1,000 இயந்திரவலுவுக்கு குறைவான வாகனத்துக்கான வரி 15 சதவீதம் குறைப்பு.
சீமெந்து மற்றும் உருக்குக்கான தீர்வை குறைப்பு. இதன் மூலம் சீமெந்து மூடையொன்றின் விலை 90 ரூபாவால் குறையுமென எதிர்பார்ப்பு.
மோட்டார் வாகனங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் செலுத்தாத வரிகளை மீளப்பெற யோசனை. இதன் மூலம் 12,000 மில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டிய வரிக்கு தள்ளுபடி.
எதனோல் இறக்குமதியை கட்டுப்படுத்த சுங்க பிரிவுகளில் ஸ்கேன் இயந்திரம் பொருத்த நடவடிக்கை.
5,000 ரூபாவாக இருந்த திருமண மற்றும் பதிவுக்கட்டணம் 1,000 ரூபாவாக குறைப்பு.
25 சதவீதமாக இருந்த அலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைக்கான வரி குறைப்பு.
விளையாட்டு நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளுக்கு 1,000 மில்லியன் ரூபாய் வரி.
மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு விலைமனுக்கோரல். ஒருவருக்கு 3 அனுமதிப்பத்திரமே வழங்கப்படும். மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்படும்.
அங்கவீனமடைந்த இராணுவவீரர்களுக்கு, ஆகக்குறைந்தது 5 இலட்ச ரூபாய் கடன்.

மஹாபொல புலமைப்பரிசில் 5,000 ரூபாவால் அதிகரிப்பு.

அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கு 250 ரூபாய் கொடுப்பனவு.

ஸ்ரீ லங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் நட்டம் நாட்டுக்கு பெரும் பாரமாக இருப்பதனால் இரு நிறுவனங்களும்இணைக்கப்படும். இந்நிறுவனங்களினால் நாட்டுக்கேட்பட்ட 100 பில்லியன் ரூபாவை கடந்தது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கான பஸ் கட்டணம் 50 சதவீதத்தால் குறைப்பு.

மீனவர்களுக்கு ஆயுட் காப்புறுதி.

250 ரூபா செலுத்தி வங்கிக்கணக்கு ஆரம்பிக்க நடவடிக்கை.

அரச நிறுவனங்கள் அரசசெலவில் விளம்பரம் செய்தல் நிறுத்தப்படவேண்டும்.

Related Posts