Ad Widget

மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ்! மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!

ஐரோப்பிய ஒன்றியத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இலங்கையில் மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் புதிய தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் இருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தடையை நீக்கி மீண்டும் மீன் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts