Ad Widget

மாறுபட்ட விலை, நிறைகளில் நெல் கொள்வனவு

பெரும்போகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெல்லை கொள்வனவு செய்பவர்கள் விலை, நிறை என்பனவற்றில் மாறுபாடுகள் செய்வதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மூடை நெல்லின் நிறை 69 கிலோகிராம் ஆகும். ஆனால் உடன் நெல் என்றுகூறி 75 கிலோகிராமே ஒரு மூடையாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்கின்றனர். இந்த கொள்வனவின் போது விவசாயிகள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நெற் களஞ்சிய பூமி எனப்படும் குமுளமுனை கிராமத்தில் இருந்த விவசாயிகள் பலர் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். அருவி வெட்டும் இயந்திரம் மூலமே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்னறனர். இதற்காக வெட்டும் இயந்திரத்துக்கு இயந்திர கூலி அதிகமாக அறவிடப்படுகின்றது.

இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கையின் கமத்தொழில் சேவை நிலையங்களுக்கு இந்திய அறுவடை இயந்திரங்களை வழங்கியது. இயந்திரங்களை இலவசமாக பயன்படுத்தவேண்டும் அல்லது குறைந்த வாடகையை அறவிடவேண்டும் என்று. ஆனால் தனியார்கள் 2,200 ரூபாய் வாடகை பெறுகின்றபோது, கமத்தொழில் சேவை நிலையம் 2800 ரூபாய் வாடகை பெறுகின்றனர்.

விவசாயிகளின் இந்த துன்பத்துக்கு விவசாய அமைச்சர் என்ற வகையில் ஒரு சீரில் நெல் கொள்வனவு நடைபெற ஆவன செய்வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

Related Posts