Ad Widget

சிவாரத்திரியை வர்த்தக விடுமுறையாக பிரகடனப்படுத்தவும் – ஜனாதிபதிக்கு கடிதம்

மகா சிவராத்திரி தினத்தை வர்த்தக விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்து மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் கோரிக்கை கடிதம் புதன்கிழமை (11) அனுப்பி வைத்துள்ளது

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிவராத்திரியானது இந்துக்களின் மிகமுக்கிய மத தினமாக உள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து இந்துக்களாலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த தினம் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவராத்திரி தினமான எதிர்வரும் 17ஆம் திகதியை வர்த்தக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவாலயங்களை சூழ்ந்துள்ள பக்தர்கள் சிவராத்திரி தின இரவில் கோயில்களுக்கு செல்வதற்கு வசதியாக அவர்களது சுதந்திர நடமாட்டத்துக்கு உறுதியளிப்பதுடன் அந்த பிரதேசங்களுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.

சிவராத்திரி தினத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மலையகத்திலிருந்து மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதி செய்து தரும் முகமாக, மேலதிக பஸ்களை இரவும் பகலும் சேவையில் ஈடுபடுத்த பொதுபோக்குவரத்து சேவை வழிவகை செய்ய வேண்டும்.

அன்றைய தினத்தில் அனைத்து மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படுவதற்கும் வழிவகை செய்யப்பட வேண்டும் என கோருகின்றோம் எனவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு முறையான அனுமதியை வழங்க பொலிஸ்மா அதிபரை கோருகின்றோம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts