Ad Widget

உள்ளூராட்சி திணைக்கங்களில் ஒழுக்கமுறை மீறல்கள்: விந்தன் கனகரட்ணம்

யாழ். மாநகரசபை வட, கிழக்கு மாகாண தொழிலாளர் சங்கத்தின் 40 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் நாவலர் கலாசார மண்டபத்தில், புதன்கிழமை (11) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

vinthan-kanakaraththinam

மாநகரசபை நீதியாக செயற்பட வேண்டும் என்று பல தடவைகள் குரல் கொடுத்து பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கினோம். தொடர்ச்சியாக குரல் கொடுத்து பல ஊழியர்களின் நியாயமான வேண்டுகோளை வடமாகாண சபையினூடாக நிறைவேற்றியுள்ளோம்.

ஆனால் தொடர்ச்சியாக உள்ளூராட்சி திணைக்களங்களில் பழிவாங்கல்கள் தகுதியானவரை பதவிகளில் நியமிக்காமை பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் நடைபெறுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

இதனை நாம் அனுமதிக்க முடியாது. இதனை எதிர்த்து தொடர்ந்து நாம் குரல் கொடுப்போம். அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் ஊழியர்களுக்கு நியமனங்களையும் பெற்றுக் கொடுப்போம்.

இச்சங்கம் ஒழுங்குமுறையுடன் செயற்படுவதற்கு கட்டடவசதிகள் போன்றவற்றை செய்து கொடுக்கும் கடமை மாநகரசபை நிர்வாகத்துக்கு உள்ளது.

இதை பெற்றுக் கொடுப்பதற்கு வடமாகாண சபை ஊடாக நாம் தேவையான உதவிகளை செய்வோம் மாநகரசபை ஊழியர்களின் குடும்பங்களின் நலன்களை பேணிப்பாதுகாத்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்றார்.

Related Posts