- Wednesday
- September 17th, 2025

இன்று (15) வடக்கின் அனலைதீவு-யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை (15) சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிலவேளைகளில் கடுங்காற்றுடன் கூடிய இடி மின்னல் ஏற்படக்கூடிய...

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றியத்தினால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஜே.கே நிறுவனமும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் இணைந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கலந்துரையாடலின்...

கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது...

யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான...

திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான விதிகளையே புதிய அரசாங்கம் அமைத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதை நிர்மாணப் பணிகளுக் காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,...

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஸ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. அத்துடன் அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும்...

சுன்னாகம் நிலத்தடி நீர் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கினைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது இந்த விவகாரத்தில் அரசியல் கலந்திருப்பதாகக் கூறி, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும்...

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் 500 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர அழைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மாத்திரம் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரிவின் ஊடகப் பேச்சாளர், பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலி பேஸ்புக் கணக்கு குறித்தே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஏனையவர்களின் கணக்குகளை முடக்கி தரவுகளை மாற்றியமை...

புதியதொரு அரசியல் கலாசாரத்திற்குள் நுழைந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இன, மத, கட்சி பேதங்களை புறந்தள்ளிவிட்டு இலங்கை சமூகம் என்ற உணர்வுடன் வருங்காலத்தை எதிர்பார்த்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளில் இருந்து மீண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையானது மிக முக்கியமான விடயமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் இடம்பெற்ற மனித நேயத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தொழிற்கட்சியின் தலைவர் டேவிட் மிலிபான்ட் கோரியுள்ளார். தமிழ் புது வருடத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். இலங்கையில் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகள் உட்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும்...

"கடந்த காலங்களில் கொடிய ஆட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், தமது சொந்த நிலத்தில் போதிய சுயாட்சி அதிகாரங்களைப் பெற்று சுதந்திரமாக - கௌரவமாக - நிரந்தரமாக வாழும் நிலை வரவேண்டும் என்று சித்திரைப் புத்தாண்டில் நாம் பிரார்த்திக்கின்றோம். அதுவரை நாம் ஓயாது போராடுவோம் என்றும் சபதம் எடுத்துக்கொள்கின்றோம்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் நெஞ்சுவி காரணமாக கொழும்பிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இது பாரதூரமான ஒன்றல்ல என கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளையில், அஸ்கிரிய பீடாதிபதியின் மரணத்தையடுத்து இவ்வருட புத்தாண்டு நிகழ்வுகள் எதிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் என பிரார்த்திப்போம். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய "மலரட்டும் புதுவசந்தம்' என்னும் புத்தாண்டு...

தலைக்கு மருத்துநீர் பூசும் தேசிய நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி 9.06 மணிக்கு பிறக்கு சுபநேரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கதுருவெல ஜயந்தி விகாரையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் சுதேச மருத்துவ திணைக்களத்தினால் வடமத்திய மாகாண கதுருவெல விகாராதிபதி கதுருவெல தம்மபால தேரர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் யானைகளுக்கும் தலைக்கெண்ணெய் பூசும் நிகழ்வு...

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14-04-2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. திருக்கணிதப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47...

முப்பது வருடங்களின் பின்னர் யாழ் பல்கலை கழகம் இன்கிலாப் இஸ்லாமிய சஞ்சிகையை வெளியிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் இந்த சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது யாழ் பல்கலைகழக கைலாசபதி அரங்கில் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சஞ்சிகையை வெளியிட்டார். இந்நிகழ்வில் விவசாய பீட...

புதுவருடத்திற்கு தாய் வாங்கிக் கொடுத்த ஆடைகளை பரிந்து கொள்வதில் மகன்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த துரதிஸ்டவசமான செய்தி முல்லைத்தீவு - முல்லியாவெலி கண்ணீரூற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரர் (19 வயது) கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய இளைய சகோதரர்...

வடபகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணெருவர் உட்பட நான்குபேரை தாம் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்துள்ளனர் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இந்த குழுவிடமிருந்து நகைகள், இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசிகள் உட்பட 24 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்களையும் தாம் கைப்பற்றினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த...

வீமன்காமன் வடக்குப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணியில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்று செயற்பட்டுள்ளமையை அங்குள்ள பயிற்சி உபகரணங்கள் மூலம் அறியமுடிகின்றது. கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 613 ஏக்கர் காணிகளை மக்கள் பார்வையிடுவதற்கு சனிக்கிழமை (11) அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீமன்காமம் வடக்குப் பகுதியில் இராணுவ பயிற்சி முகாம்...

All posts loaded
No more posts