Ad Widget

பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துதல்

எதிர்வரும் 31.01.2015 காலை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை 'பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில்...

2015 வரவுசெலவு ஒரே பார்வையில்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு... அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும். இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது....
Ad Widget

வாள்வெட்டில் மூவர் படுகாயம்

யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இடத்தை சேர்ந்த நகுலன் சுஜாதா (வயது 25), சதீஸ் உசாந்தினி (வயது 22), திருச்செல்வம் சதீஸ் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தனர். காணிப் பிணக்கு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே...

காற்றாலை மின் உற்பத்தி கிளிநொச்சியில் ஆரம்பமாகிறது

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் சுமார் 3.3 பில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி வள்ளி முனை,புலோப்பளை ஆகிய இடங்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு இனி தடை

பாடசாலைகளின் தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் – சுரேஷ்

அடுத்த தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எரிவாயு, பெற்றோலியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வரவு செலவுத்திட்டம். முன்னைய அரசுகள் மக்கள் மீது சுமத்திய வரிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த...

இந்திய துணைத் தூதுவர் வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் நேற்று வியாழக்கிழமை (29.01.2015) வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம் செய்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் சம்பிரதாய பூர்வமான சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இதன்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம்,வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர்...

‘கடூ­ழிய சிறை தண்­ட­னையாய் உணர்ந்தேன்’ : ஷிராணி உருக்கம்

இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் 43 ஆவது பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க நேற்று நள்­ளி­ரவு 12.00 மணி­யுடன் தனது பத­வியில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்தார். புதுக்­கடை, உயர் நீதி­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று முற் பகல் இடம்­பெற்ற பிர­தம நீதி­ய­ர­சரின் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஓய்­வு­பெறும் வைப­வத்­தி­லேயே கலா­நிதி ஷிராணி பண்­டா­ர­நா­யக்க இதனை தெரி­வித்தார். 2013 ஜன­வரி...

காணி தருகிறோம் என அழைத்தால் மாகாண சபைக்கு அறிவியுங்கள்!

உங்களுக்கு இங்கேயே காணி தர நடவடிக்கை எடுகிறோம். எவராவது காணி தருவதாக கூறி அழைத்து செல்ல முற்பட்டால் உடன் எமக்கு அறிவியுங்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தின் மக்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்த போது அம் மக்களை வேறு இடங்களுக்கு மாற்றி குறித்த காணியை வேறு திட்டங்களுக்காக...

வடக்கில் தனியார் காணிகளை மீள வழங்க அரசு தீர்மானம்!

சர்வதேச தராதரத்துடனான உள்நாட்டு யுத்தக்குற்ற விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். அது புதிய உள்நாட்டு விசாரணையாகக் காணப்படும். தேவைப்பட்டால் வெளிநாட்டு நிபுணர்களை அழைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஒப்படைப்பதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும்...

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யக்கோரி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை (28) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிப்பட்டுள்ளதாவது, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வடமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் கோரும்...

அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் இணைந்து புதிய அமைப்பு

தற்போது இலங்கையின் பல்வேறு முகாம்களிலும் சிறைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள - வடமாகாணத்தைச் சேர்ந்த - அரசியல் கைதிகளினதும் உறவினர்கள் நேற்று வியாழக்கிழமை (29) யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி, 'தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர் ஒன்றியம் - வடமாகாணம்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். இந்த அமைப்பின் தலைவராக கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி செல்லையா பவளவள்ளி (தொலைபேசி இலக்கம் 0774823465),...

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட வட மாகாண முன்னாள் போராளிகள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு 40 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி வர்த்தக வாணிப மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் தெரிவித்தார். யாழிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து...

சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்!

நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை பிரிட்டன் அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,...

சர்வமத குழு யாழுக்கு விஜயம்; மக்களது துன்பங்களையும் நேடியாக பார்வை

யாழ்ப்பாணத்திற்கு வந்த சர்வமத குழுவினரிடம் அரசியல் கைதிகள் விடுதலை ,மீள்குடியேற்றம் என்பன துரித கதியில் இடம்பெற வேண்டும். அதற்கு சர்வமத குழுவினரின் பங்களிப்பும் அவசியம் என யாழ். மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். தென்மாகாணம் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வமத குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து உயர்பாதுகாப்பு வலையம், நலன்புரி முகாம்கள் , முஸ்லிம்...

மா, சீனி உள்ளிட்ட 13 பொருள்களின் விலை குறைப்பு

மா, சீனி உட்பட 13 அத்தியாவசியப் பொருள்களின் விலை இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். விலை குறைப்பு செய்யப்பட்ட பொருள்களின் விலை விவரம் வருமாறு:- சீனி - 10 ரூபாவாலும் - 400 கிராம் பால் மா - 325 ரூபாவாகவும் சஸ்டஜன்...

காஸ் விலை 300 ரூபாவால் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ காஸ் 300 ரூபாவால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். இதன்படி 1596 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத் தாருங்கள்; வலி.வடக்கு மக்கள் கோரிக்கை

இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் சுன்னாகம் நலன்புரி நிலைய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதம நீதியரசராக ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானம்!

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக க.ஸ்ரீபவனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை - இன்று நள்ளிரவுடன் ஓய்வுபெறும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்க தாம் ஓய்வுபெற்ற பின்னர் ஏற்படும் பிரதம நீதியரசர் வெற்றிடத்துக்கு...

அரச ஊழியர்களுக்கு 10,000 சம்பள உயர்வு!

அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் தற்போது மினி வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்து உரையாற்றி வரும் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி...
Loading posts...

All posts loaded

No more posts