- Monday
- July 7th, 2025

யாழ். மாவட்டத்தில் உணவிலிருந்து ஏற்படும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 25 வீதம் தொடக்கம் 30 வீதம் வரையில் 2014ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கம் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தது. உலக சுகாதார தினம் 7ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின்...

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களின் அமைச்சு மாற்றல்கள் தொடர்பாக அவற்றை இடைநிறுத்தவோ மாற்றம் செய்யவோ நான் எந்த சிபார்சும் செய்யவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இது தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி, ஒப்பமிடாது தமது குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய மனுவின் பிரதியொன்று எனக்கும் கிடைக்கப்பெற்றது. எனது...

யாழ். தம்பானை நாச்சிமார் கோவில் வீதியிலுள்ள வீட்டுக்காரருக்கு எதிராக 75 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (05) விசித்திர முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் சென்ற தன்னை மேற்படி பகுதியிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் கடித்து விட்டதாகவும், அது தொடர்பில் நாய் வளர்க்கும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி முறைப்பாட்டை பதிவு...

கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசங்களில் 2013ஆண்டை விட, 2014ஆம் ஆண்டு, 25 சதவீதம் விபத்துக்கள் அதிகரித்துக் காணப்பட்டிருந்தது. இதற்கான முக்கிய காரணமாக மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையே என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சிந்தக்க.என்.பண்டார, ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 2014ஆம் ஆண்டு 5 பேர் விபத்துக்களினால் இறந்துள்ளதுடன், 14...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள்...

கழிவு நீர் மாசடைதலினால், பல்வேறு தரப்பினரிடமும் உதவிக்காக அணுகிய போதும், குறைந்த பட்ச ஜனநாயக உரிமை கிடைக்கவில்லை என கோரி, மக்கள் பேரணி ஒன்றினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் மற்றும் இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமையம் விதை குழுமம் ஆகியன இணைந்து, இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்....

சூரியன் நேற்று (05) முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக நேர் கோட்டில் பயணம் செய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கையில் கொக்கல, நாக்குலகமுவ மற்றும் தெனிபிட்டிய ஆகிய பிரதேசங்களில் நண்பகல் 12:13 மணியளவில் சூரியன் நேர்கோட்டில் பயணிப்பதை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கவிஞர் புதுவை இரத்துனதுரை தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்துமாறு கோரி அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கையளிக்கக் கோரி என்னிடம் கடிதம் தந்திருந்தனர். மாகாண ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்திருந்தபோது அக்கடிதத்தை அவரிடம் கையளித்திருந்தேன். பொதுமக்கள் சிலர் தந்த முறைப்பாட்டுக் கடிதங்களையும் அவரிடம் கொடுத்திருந்தேன். பொதுமக்களின் முறைப்பாட்டுக் கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து...

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்குள் புகுந்த மூவர் கடை உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச்சென்றனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:- குறித்த உணவகத்தின் முன்பாக வாகனம் ஒன்றை நிறுத்தியவர்களுக்கும், கடை உரிமையாளருக்குமிடையில் நேற்று மாலை வாக்குவாதம் ஏற்றபட்டுள்ளது. இதன் பின்னர் இரவு 7 மணியளவில்...

இந்த நாட்டில் இனி ஒரு யுத்த சூழல் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு குண்டுகளும் துப்பாக்கிகளும் எமக்கு உதவாதவை. பதிலாக மொழி, மத பேதங்களைக் களைந்து எல்லா மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமே அமைதி சூழலை உருவாக்கமுடியும். -இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. போதகர் ஒன்றியத்தின் "விளஸ்...

இணுவில் கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாகவுள்ள அச்சகத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம், சனிக்கிழமை(04) பிற்பகல் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர். இணுவில் கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கே.செல்வானந் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். அச்சகத்தில் இருந்த இவர் நீண்டநேரமாக வெளியில் வராததால் சந்தேகம் கொண்ட பக்கத்துக் கடைக்காரர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது அவர்...

தொண்டைமானாறு அக்கரை கடலில் சனிக்கிழமை(04) நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை(05) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். புத்தூர் வடக்குப் பகுதியை சேர்ந்த கருணாணந்தன் மிதுலன் (வயது 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கடலுக்கு சென்ற 12 நண்பர்களும் கடலில் குளித்த பின்னர் கேக் வெட்டுவதற்காக...

காங்கேசன்துறை சிமெந்து ஆலையை மீள இயக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் தொழிற்சாலைக்கு நேரில் சென்று அதிகாரிகள் பார்வையிடுவதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் இன்னும் வழங்கப்படாததன் காரணத்தால் அந்தப் பணியின் ஆரம்பக் கட்டப் பணிகள் தாமதமடைகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. தொழிற்சாலையை மீள இயக்கு வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக சிமெந்துக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் மொஹ மட்...

வட மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு ஆளுனர் செயலகத்தினால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஆளுனர் செயலகத்தின் ஊடக அறிக்கை - 04.04.2015 வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டமை பற்றி ஊகத்தின் அடிப்படையிலான தவறான செய்திக் கட்டுரை...

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் யுத்தத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வாழ்வாதார உதவிகளும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகளும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்த நிலைமை பின்தங்கிய பிரதேசமாகத் திகழும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட அரச உதவிகள் கிடைத்துள்ள...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால், இன்று சனிக்கிழமை (04) இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு, மார்டின் வீதியில் அமைந்துள்ள...

ஐக்கிய நாடுகளின் துணை பொதுச்செயலர் ஹவுலி யேங் சு, இலங்கைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்யவிருக்கின்றார். அவர், எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் இலங்கையில் தங்கியிருப்பார் என்று ஐ.நா.வின் கொழும்பு காரியாலயம் தெரிவித்தது. நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற புதிய அபிவிருத்தி தேவைகளை இனங்கண்டுகொள்வதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமுகத்தினரை சந்தித்து...

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிடுவோர் மற்றும் எழுதுவோருக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் வகையில் குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான தீர்மானத்தை நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர்...

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. அவரை ஆண்மீகத் தலைவராகப் பார்ப்பதா அல்லது அரசியல் தலைவராகப் பார்ப்பது என்பது தொடர்பிலும் மாறுபட்ட கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றன. இலங்கை ஒரு அமைதியான பௌத்த நாடு என்பதால் தலாய்...

இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் அடங்கிய அரசுக் கெதிரான இன வாத உணர்வுகளை தூண்டுகின்ற இறுவட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் நீதிமன்றால் அந்தக் குற்றச்சாட்டி லிருந்து விடுவிக்கப்பட்டார். குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது....

All posts loaded
No more posts