Ad Widget

இ.போ.ச க்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்!

வடமாகாண தனியார் தூர பேருந்து சேவைகள் சங்கத்தினருக்கும் வட பிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையில் ஏற்படுகின்ற நேர அட்டவணைப் பிரச்சனையை 60:40 என்ற ரீதியில் தீர்க்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

CTB-BUS-meeting

இப்பிரச்சனை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துத்துறை அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் மற்றும் மாவட்ட அரச அதிபர் திரு என்.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நேற்று (07) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இருந்து தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் தனியார் பேருந்து சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் நேர அட்டவணைப் பிரச்சனையை 60:40 என்றரீதியில் தீர்க்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பிரதம கணக்காளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உறுப்பினர், இ.போ.ச வின் உறுப்பினர் மூவர், தனியார் சங்கத்தினர் மூவர் என 11 பேர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

குறித்த இரு சங்கங்களிற்குமிடையே ஒழுங்கான நேர அட்டவணை இல்லாத காரணத்தால் இரு பகுதிகளுக்குமிடையே முரண்பாடுகள் தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வினை பெற்றுக் கொள்ளவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது மேலும் இக்குழுவானது வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களின் சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு எடுக்கவுள்ளது.

Related Posts