- Friday
- September 19th, 2025

தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார். 'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை....

யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தின் தையல் இயந்திரம் வழங்கும் நீண்ட செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று பருத்தித்துறை கந்தமுருகேசனார் சனசமூக நிலையம் மற்றும் ஓடக்கரை சனசமூக நிலையத்தில் 11 பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் யாழ் றோட்டரி கழகத்தின் தற்போதைய பொருளாலர் நிமல்சன் மற்றும் புதிய தலைமுறை இயக்குநர் ஜெபநேசன் ஆகியோர்...

இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 65 புகழிடக் கோரிக்கையாளர்கள் தமக்கு உதவுமாறு நியூஸிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டவிரோதமாக நியூஸிலாந்துக்கு கடல் மார்க்கமாக செல்ல முற்பட்ட நிலையில் கடலில் தத்தளித்த இவர்களில் இலங்கை, மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது. தாம் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பற்றது எனவும்,...

கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன. இன்று சனிக்கிழமை காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள்...

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்துக்கான விசேட பண்ட வரியானது குறைவடைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரியானது 55 சதவீதத்தில் இருந்து 20 வீதமாகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியானது 30 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மட்டுவில் இல்வாரைக் குளம் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகிறது. மட்டுவில் இல்வாரைக் குளத்துக்கு அருகில் உள்ள பற்றைக்காணியில் எரிந்த நிலையில் இருந்த இந்தச் சடலத்தை கண்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கல்வயலைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம்...

நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மகி நூடில்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புதுடில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மகி நூடில்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர். காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது...

கஞ்சா விற்பனையில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை உட்படுத்தி அவர்களையும் மனதளவில் பாதிப்படையச் செய்த பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் பகுதியைச் சேர்ந்த நபருக்கு 7 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பருத்தித்துறை நீதவான் மா.கணேசராசா வெள்ளிக்கிழமை (05) தீர்ப்பளித்தார். பருத்தித்துறை புனிதநகரிலுள்ள மதுபான நிலையத்துக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 31 வயதுடைய பெண்ணொருவரை வியாழக்கிழமை...

சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்....

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரம் இருந்த விகாரை அமைக்கப்படும் காணி உரிமையாளர்கள் மூவரையும் விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். தனியார் காணிகளில் விகாரை அமைக்கப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும்...

போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எதிராக, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2015 ஆண்டு மே மாதம் வரையில் மட்டும் 29 இலட்சம் மோட்டார்...

13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 27 வயதான இளைஞர் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்டுகின்றது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தின அச்செழு பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆலயத் திருவிழாக்களின் போது சிறுமியின் தாயார் கச்சான் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு உதவியாகக் குறித்த இளைஞன் இருந்தார்...

"எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீ குளிப்பேன்" என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும், "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை...

17 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் சஜீவன் (17) என்ற சிறுவனே காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 07.00 மணிக்கு வெளியில் போய்விட்டு வருவதாக கூறி சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர்கள் ஊர்காவற்துறை பொலிஸ்...

மாணவர்களிடம் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் அதிகமாக இருக்கிறது. மாணவர்களால் ஆகாதது எதுவும் இல்லை என்பார்கள். அந்தவகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள் முன்வர வேண்டும் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சுற்றாடல்...

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் 1995ஆம் ஆண்டு புக்காரா விமானக் குண்டு தாக்குதலில் பலியாகிய 21 மாணவர்கள் நினைவாக வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கான அடிக்கல் வெள்ளிக்கிழமை (05) நாட்டப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இந்த அடிக்கல்லை நாட்டினார். விமானக் குண்டுத் தாக்குதலில் வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் எதிர்க்கட்சி கையளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 112 பேர் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே நேற்றிரவு அவரிடம் கையளித்ததாக அவர் மேலும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்று குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தரோடை அருளானந்த பிள்ளையார் ஆலயத்தில் வியாழக்கிழமை (04) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற குழு மோதலில் 8பேர் காயங்களுக்கு ஊள்ளாகி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மோதலில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்தனர். இசை நிகழ்ச்சிக்கு மதுபோதையில் சென்ற இளைஞர்கள் சிலர்...

All posts loaded
No more posts