Ad Widget

வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் எந்த முடிவும் இல்லை!

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இராணுவமே தீர்மானிக்க வேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

2009 – 2014 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்த 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாகவும், கடந்த அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கமையவே சம்பூர் கடற்படை முகாம் அகற்றப்பட்டதாகவும் ஆனால், தற்போதைய அரசாங்கமோ சம்பூரில் அகற்றப்பட்ட முகாமை வேறொரு காணிப் பகுதியில் மீண்டும் அமைப்பதற்காக 200 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Posts