- Wednesday
- July 9th, 2025

இதுவரையில் நடந்து முடிந்துள்ள ஒரு தேர்தலுக்கு முன்பாவது இதுவரையில் நாம் எமது மக்களுக்கு இதுவெல்லாம் செய்துள்ளோம் எனக் கூறி வாக்கு கேட்கத் தகுதியில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இனி செய்வோம் என்று கூறியே தொடர்ந்தும் வாக்குகளைக் கேட்டு வருகின்றார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் எமது மக்களுக்கு எதுவுமே செய்யாமல், எமது மக்களை ஏமாற்றி, முடக்கி...

இலங்கையின் வடக்கு -கிழக்கு மக்களுக்கு உசிதமான ஒரு தீர்வு உருவாக உலகத்தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்று அமெரிக்காவில் அறைகூவல் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன். ஓர் இனத்கை குறிவைத்து இனப்படுகொலை நடைபெறும்போது அதற்கு எதிர்த்தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால்,இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம்தான் அதற்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், இருப்பினும் அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்குத் தமக்கு அதிகாரமில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என பிரஜைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயத்தைக் குறப்பிட்டதாக தொழிற்சங்கத் தலைவர்...

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் துப்பாக்கி மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அவர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நெல்லியடி பிரதேசத்தில் அதிகாலை 4 மணியளவில் வீதி...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக நாட்டில் அரசியல் பதற்ற நிலை அதிகரித்துவரும் வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க நேற்றுப் பிரிட்டனுக்குத் திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய சகாவான சந்திரிகா குமாரதுங்க சமீபத்தில் இடம்பெற்ற மஹிந்த தரப்பு விடயங்கள் குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ளார் எனவும், இந்நிலையிலேயே அவர் பிரிட்டன் பயணமாகியுள்ளார்...

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரன் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே என தெரிவித்துள்ளார்இச்செவ்வியின் போது காணாமல் போனோர்கள் தொடர்பான விடயம் ஐ.நா சபையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை தரும் என தெரிவித்துள்ள அவர் முன்னாள் போராளிகள்...

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைகள் குழப்பங்களின் மத்தியில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஆறு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி அந்தக்கட்சியின் சார்பில் மாவை.சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், சிறிதரன், அருந்தவபாலன் ஆகியோருடன் பெண் வேட்பாளராக மதினி நெல்சன் போட்டியிடுகிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இரண்டு...

பிரதான கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத கூட்டம் கூடுதல், வேட்புமனு தாக்கல் செய்வதை தடைசெய்தல், இடையூறு செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் தடை விதித்துள்ளதுடன் அதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

தலைக்கவசம் அணியாமல் வேகக்கட்டுப்பாட்டு இல்லாமல் மோட்டார் வாகனத்தில் வந்த இளைஞன் குருநகர் சேமக்காலைக்கு திரும்பு வளைவுடன் மோதுண்டதில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 8 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவத்தில் செல்வராசா றுபின் வயது 19 என்பவரே உயிரிழந்தவராவார். மேலும் இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் எவர் சென்றாலும் எக்காரணம் இல்லாமல் உடனடியாக அவர்கள்...

சுன்னாகம், புஸ்பமணியம் வீதியில் கஞ்சா நுகர்ந்த பூசகர் ஒருவரை, நேற்று வியாழக்கிழமை (09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இரகசியப் பொலிஸார், பூசகர் மீது சந்தேகம் கொண்டு விசாரணை செய்த போதே, பூசகர் கஞ்சா நுகர்ந்தமை தெரியவந்தது. பூசகரை...

புலிப் போராளிகளுக்கு எதிர்வரும் தேர்தலில் ஆசனங்கள் ஒதுக்க இயலாது என புலிப் போர்வையாளிகள் கூறியுள்ளனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "புலிகள்...

சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, நேற்று வியாழக்கிழமை (09) தீர்ப்பளித்தார். கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில்...

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக தெரிவித்துள்ளார் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும்,...

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரத்தில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்பட்ட இடத்தில் நடக்கும் அகழ்வுப்பணிகளில் தொடர்ந்து மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இன்று வியாழக்கிழமை மேலும் 6 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இதுவரை இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. திருகோணமலை நகரிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில்...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில்...

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் த.தே.ம.முன்னணியின் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அம்பாறையில் அவர்கள் முதலாவதாக் வேட்புமனுவை சமர்ப்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள த.தே.ம.முன்னணியின் உறுதியாகியுள்ள வேட்பாளர்களின் விபரம் கசிந்துள்ளது. 7 வேட்பாளர்களுக்காக 10 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்தரன் , பத்மினி...

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் அதிலிருந்த முற்றாக விடுபட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைபொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளுக்கெதிராக கட்சி பேதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். "போதைப் பொருள் அற்ற நாடு" என்ற தொனிப்பொருளில் ஜாஎல நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வில் உரையாற்றும்...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்தும், காணாமற் போனவர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் பின்னர் தீர்க்கமான முடிவு எடுப்பதாகக் கூறியிருப்பது எதிர்வரும் தேர்தலிலும் எமது மக்களை ஏமாற்றும் இன்னொரு செயற்பாடாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு அடிப்படையில் தமிழ், அரசியல்...

இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது பொதுமக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படுவதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு தடுக்கத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்செகோவினா ஆகியன தொடர்பில்...

தற்கொலை முயற்சி செய்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 4 தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி கற்ற மாணவி இவ்வாறு உயிரிழந்தவராவார். இம்மாணவி அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட ஆசிரியர்...

All posts loaded
No more posts