ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட குருமுதல்வரிடம் ஆசி பெற்றனர்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வண. பிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

dak

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வேட்பாளர்கள் இன்றைய தினம் (11) குருமுதல்வரைச் சந்தித்து இருந்தனர்.

ஆயர் இல்லத்திற்குச் சென்ற வேட்பாளர்களை குருமுதல்வர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் வரவேற்றார்.

தொடர்ந்து கட்சியின் கொள்கைத் திட்டம் எதிர்காலத்தில் மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடினர்.

அத்துடன் குருமுதல்வர் வண. பிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

இதனிடையே யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையிடமும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆசி பெற்றுக்கொண்டார்.

இதன்போது வடமாகணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மற்றும் சட்டத்தரணி றெமீடியஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts