யாழ். பல்கலைக்கழக மாணவர் இருவர் நீரில் மூழ்கி பலி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவர், விசுவமடு குளத்தில் மூழ்கி நேற்று சனிக்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா சென்று விசுவமடு குளத்தில் குளித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக வணிகபீட இரண்டாம் வருட மாணவர்களான குமுதன், கஜீபன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்த மாணவர்களின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts