- Wednesday
- July 9th, 2025

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம் முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர். 11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக...

மிகப்பெரிய யுத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார். யுத்தத்தின் மிகுதி பகுதியை ஐக்கிய தேசிய கட்சி வெற்றிகொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொரளை கொம்பல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார். 'ராஷபக்ஷ அரசை முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பெரும் யுத்த...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அரிசியின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி 69 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்...

தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் தலைமைகளை மாற்றவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், தெற்கில் எவ்வாறு...

இராணுவம் மற்றும் அநாவசியமற்ற தேவைகளுக்காக சுவீகரித்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் எமது செயற்பாடு இருக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் சார்பாக போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (10) யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில்...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடங்கிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வண. பிதா ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் வேட்பாளர்கள் இன்றைய தினம் (11)...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி (வயது 26) என்ற பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்...

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரலையும் அதற்கான நேர்முகத் தேர்வையும் பதவிக்கான நியமனத் தெரிவையும் உடனடியாக நிறுததி வைகக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் தற்போதைய அதிபராகப் பணியாற்றி வருகின்ற நாகராஜா மகேந்திரராஜா இந்த மனுவை தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை தொடர்பான...

சம்பூர் காணிப்பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று (நேற்று) வழங்கிய தீர்ப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் (நேற்று) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த...

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னித் தேர்தல் தொகுதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என இளைஞர் கழகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வரும் நிலையில் கூட்டமைப்பு இளைஞர்கள் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை. குறிப்பாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்ற...

பாடசாலைகளுக்கு அண்மையில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் தொடர்பில் பெற்றோர், ஆசிரியர் கவனமாக இருக்கவேண்டும். சந்தேகத்துக்குரிய இனிப்பு வகை விற்பனை செய்வது தொடர்பில் அறியப்படுமாயின் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யலாம் என நுகர்வோர் அதிகாரச்சபையின் பணிப்பாளர் சந்திரிக்கா திலக்கரத்ன தெரிவித்துள்ளார். டோரா (Dora) என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இனிப்பு வகைகளை உட்கொண்ட மஹாரகம பிரதேச...

யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28 ஆண்டு கால மனித நேய சேவை நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பூநகரி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முழங்காவில் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் போது மருத்துவ உபகரணங்கள்...

நாட்டிலுள்ள சகல பிள்ளைகளும் சிறந்த கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதுடன் கிராம மற்றும் நகர்ப்புற பிள்ளைகள் அனைவருக்கும் சமமான வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிள்ளைகள் தமது கல்வி மற்றும் அனுபவத்தினூடாக எதிர்காலத்தை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் சிறந்த கல்வி முறையை நாட்டில் ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொட்டாஞ்சேனை...

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூடுதலான...

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இரு தேசங்கள் ஒரு நாடு என்னும் கொள்கை அடிப்படையில் தொடர்ந்தும் பயணிக்கும். மக்கள் தமிழ்தேசியத்தின் உயர்ச்சிக்கா? அழிவுக்கா? வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருக்கின்றார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு...

ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார். தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார்....

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் யாழ் மாவட்டத்திலுள்ள எல்லா பொலிஸ் நிலையங்களையும் மூடி விடுவோம் என முன்னாள் யாழ் மாவட்ட உறுப்பினரும், உதவி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் கூறினார். பொலிஸ் நிலையங்கள் எல்லாம் மக்களின் காணிகளில் தான் இயங்குகின்றன அனைத்து பொலிஸ் நிலையங்களும் அகற்றப்பட்டு அவர்கள் தமது சொந்த கட்டிடங்களில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்...

இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியும் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்தது. வேட்பாளர்களாக திருமதி விஜயகலா மகேஸ்வரன், ராஜலிங்கம் சிவசங்கர், சின்னத்துரை குலேந்திரராசா , செபஸ்ரியாம்பிள்ளை மரியதாசன், ரவீந்திரன் சுஜீபன், குமாரு சர்வானந்தா, இளையதம்பி நாகேந்திரராசா, முகமட் சுல்தான் ரகீம், வன்னியசிங்கம் பிரபாகரன், சின்னராசா விஜயராசா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பட்டியலில் மகேஸ்வரனின் தம்பி...

2015 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பொருட்டு யாழ். மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (10) சுப நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முதன்மை வேட்பாளராக முன்னிறுத்தி அவரது தலைமையில்...

வடமாகாணத்தின் முதலாவது பிளாஸ்ரிக் மீள்சுழற்சி மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட காக்கைதீவில் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2015) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். மனித ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெருங்கேடு விளைவிக்கும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை...

All posts loaded
No more posts