Ad Widget

சமையல் எரிவாயு, அரிசி விலைகள் குறைப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி முதல் விலைக்குறைப்பு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரிசியின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். வெள்ளை அரிசி மற்றும் நாட்டு அரிசி 69 ரூபாவாகவும், சிவப்பு அரிசி 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts