தமிழர்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகளை மாற்ற வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களை ஏமாற்றி வரும் தமிழ் தலைமைகளை மாற்றவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

தெற்கில் எவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ அவ்வாறு வடக்கிலும் தமிழ் ஏமாற்றுத் தலைமைகள் மாற்றப்படவேண்டும். அதனை இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என குறிப்பிட்டார்.

Related Posts