Ad Widget

ஜின்னா புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் கோரல்

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் தோற்றவுள்ள மாணவர்களிடமிருந்து ஜின்னா புலமைபரிசில்களை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் கோரியுள்ளது. க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தரம் கற்க சிறந்த பெறுபேறுகளுடன் தெரிவாகி- பொருளாதார பிரச்சினையிலுள்ளவ மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்புலமைபரிசிலின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 24.000 ரூபா நிதி வழங்கப்படும்.கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் பாகிஸ்தான்...

19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்

அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள்...
Ad Widget

நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள்...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பதவிக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது முதல் 28 வயது வரையான திருமணமாகாத க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கணிதம் தாய் மொழி உட்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்த ஆகக்குறைந்த 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்...

வடமராட்சியில் ஒருவர் கொலை

நேற்று இரவு 8 மணியளவில் யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைகாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம்...

அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் – நல்லை ஆதீனம்

100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி என நல்லை ஆதீன குரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தை செல்வாவின் 38...

யாழ்.பல்கலைக் கழகத்திற்கு புதிய பேரவை உறுப்பினர்கள் 14 பேர் நியமனம்

யாழ்.பல்கலைகழக பேரவை உறுப்பினர்களின் தெரிவு கடந்த சில மாத காலமாக இழு பறியில் இருந்து வந்த நிலையில் புதிய பேரவை உறுப்பினர்கள் 14 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பல்கலைக்கழகங்களின் பேரவையில், உள்வாரி உறுப்பினர்களாக இருக்கும் துணைவேந்தர், பீடாதிபதிகள், மூதவை பிரதிநிதிகள்...

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா?- சுரேஸ் எம்.பி கேள்வி

நாங்கள் கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழ்ப்பாணத்திலும் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு...

மோடிக்கு விக்கி எழுதிய கடிதத்தினை இந்திய ஊடகம் திரிவுபடுத்தியுள்ளது

பிரேமானந்தா ஆச்சிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் என இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியையிட்டு தாம் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் செயலக வட்டாரங்கள், குறிப்பிட்ட செய்தி திரிவுபடுத்தப்பட்ட ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளன....

சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி விவகாரம்: நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார் டலஸ்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சர்ச்சைக்குரிய சிங்கக்கொடியை கையில் வைத்திருந்தமைக்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அத்துடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கொடியைப் பயன்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். இந்தச் செயலானது சிறுபான்மை மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்து...

பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பஸ் சேவை

பூநகரி வாடியடிச்சந்தியிலிருந்து பூநகரியின் ஏனைய கிராமங்களுக்குச் செல்வதற்கான பஸ் வசதியை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனின் முயற்சியால் வெள்ளிக்கிழமை (24) அந்தப்பகுதிக்கு இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ் சேவை ஆரம்பித்து...

வடக்கு இ.போ.ச. பிரிப்பை நிறுத்தப் பிரதமர் உத்தரவு

வடபிராந்திய இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ்., வன்னிப் பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் வடக்கில் பூதாகரமாக மாறியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்....

போரிற்கு உதவிய நீங்கள் தமிழர் தீர்வுக்கும் உதவுங்கள்; பாகிஸ்தான் அரசிடம் வணிகர் கழகம் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போரிற்கு உதவிய பாகிஸ்தான் அரசு போர் முடிந்து 5 வருடங்களைக் கடந்த பின்னரும் தீர்வின்றி இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் நவ்ராஸ் அஹமட் ஹான் சிப்ரா யாழ். வணிகர் கழகத்திற்கு நேற்று...

மானிப்பாய் இந்துக் கல்லூரி விடுதிக்கு கல் எறிந்த மாணவர்கள் கைது

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குள் நுழைந்து கலகம் விளைவித்து, மாணவர் விடுதியின் கண்ணாடிகளுக்கு கற்களை வீசிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிலரைக் வெள்ளிக்கிழமை (24) கைது செய்து வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்ற மாணவர்களில் சிலர்,...

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு 4 குழுக்கள்! இராணுவத்தை விசாரிக்கத் தனிக் குழுவாம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தத் தகவலை உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம், இதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனவும், இதன் பிரகாரம் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பணி விரைவில் ஆரம்பமாகும் எனவும்...

இராணுவ முகாமில் நற்சிந்தனை வாசகம்

யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமைச் சுற்றிலும் அறிஞர்கள் கூறிய நற்சிந்தனை வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் நடப்பட்டுள்ளன. இந்தப் பதாகைகள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் தனித்தனியாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒலிவர் வென்டல் ஹொம்ஸ், ஹென்றி போட், மார்ட்டின் லூதர் கிங் ஆகிய பல அறிஞர்களின் நற்சிந்தனை வாக்கியங்கள் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளன.

வட பிராந்திய முகாமையாளருக்கு எதிராக சுவரொட்டி

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முன்னாள் முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்கருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பொது ஊழியர் சங்கம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. வடபிராந்திய முகாமையாளராக கடமையாற்றிய அவர் கடந்த புதன்கிழமை (22) முதல் வன்னிச் சாலைகளுக்கான முகாமையாளராக மாற்றப்பட்டுள்ளார். வடபிராந்திய முகாமையாளராக அவர்...

வடபிராந்திய சபையை இரண்டாக பிரித்தமைக்கு எதிராக போராட்டம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய போக்குவரத்துச் சபை அலுவலகத்தை வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என இரண்டாக பிரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். மத்திய பஸ் நிலைய சாரதிகள், நடத்துநர்கள் வெள்ளிக்கிழமை (24) பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் செய்தனர். வடபிராந்திய சபையின் கீழ் கோண்டாவில், காரைநகர், பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 7 சாலைகள் உள்ளன....

9 எம்.பி.க்கள் உட்பட 26 பேருக்கு அழைப்பாணை

நீதிமன்ற உத்தரவை அவமதித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. இந்த 26 பேரையும் எதிர்வரும் 8ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டவே மேற்கண்டவாறு அழைப்பாணை விடுத்துள்ளார். இலஞ்ச ஊழல்...
Loading posts...

All posts loaded

No more posts