- Sunday
- September 21st, 2025

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதென வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 32 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வவுனியா...

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு 01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில்...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட விரும்பாததாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியான நீங்கள் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடத்...

இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த்...

இலங்கையின் சகல தரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞானபனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா.அமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை...

விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் அங்கு...

கோகிலவாணி ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர். 2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர். தற்போது தமிழ்த்தேசயி மக்கள் முன்னணியில்...

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள்...

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசிலிருந்து கூண்டோடு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஜனாதிபதியிடம் அனுமதிபெறவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான யோசனை நேற்று மாலை ஜனாதிபதியிடம்...

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கா இன்று வியாழக்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அநுரகுமாரவுடன் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரனும் கூட இருந்தார். இதேவேளை - மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட தலைமையத்தில் நடைபெறும்...

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நீதியானதும், சமாதானமான முறையிலும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமான...

எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எனது அரசியல் நகர்வின் ஊடாக ஏற்படுத்தப்பட்டதுதான் சமுர்த்தி உதவித்திட்டம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்புரத்தில் சமுர்த்தி பயனாளிகளுடன் நேற்றய தினம் (22) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது...

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா நேற்று புதன்கிழமை (22.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் பதிநான்கு காட்சி அறைகளில் பனை...

மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன், நேரடிபேஸ்புக் கேள்வி, பதிலுக்கு இன்றைய தினம், ஜூலை 23, 2015, காலை 8.30 முதல் இடம் பெறுகின்றது நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். Thank you everyone for all the questions and feedback. I saw so many good wishes as well - thank you for...

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர்...

வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன், எம்.கே. சிவாஜிலிங்கம், இ.அங்கஜன், ஜயதிலக ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஐந்து பேர் தற்போதைக்கு விடுப்பு பெற்றுள்ளனர். ஆனால் சிவாஜிலிங்கம் மாத்திரம்...

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த...

கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது. சம்பவம்...

75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர...

தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது)...

All posts loaded
No more posts