Ad Widget

மஹிந்தவின் காலத்தில் 700 பில்லியன் ரூபா வரி வருமானம் காணமல் போயுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்கள் தனியார் மயப்படுத்தப்படுவதாக கூறி பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் செல்வந்தர்கள் வரி அறவிடுவதில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.

உயர் வருமானம் பெறக் கூடியவர்களிடம் வரி அறவிடுவதே பிரதாண நோக்கம். சாதாரண நடுத்தர தரப்பினரிடையே வரி அறவிடுலதல்ல.

உயர் வருமானம் பெறக் கூடியவர்களிடம் வரி அறவிடுவதை இல்லாமல் செய்தது மஹிந்த ராஜபக்‌ஷவே.

உயர் வருமானம் பெறக் கூடியவர்களிடம் அறவிட்ட வருமான வரி 35% ஆக இருந்தது. அதை 28% மஹிந்த ராஜபக்‌ஷ குறைத்தார்.

சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த 2004ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6%ஆக இருந்தது. குடும்ப வருமானம் 6.5% ஆக இருந்தது.

2012 – 2013 மஹிந்தவின் காலத்தில் குடும்ப வருமானம் 0.5% இனாலே அதிகரித்துள்ளது. அதேபோல 700 பில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது என்றார்.

Related Posts