Ad Widget

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி தேர்தல்விதி முறைகளை மீறினர் என்ற குற்றம் சாட்டு வழக்கு ஒத்திவைப்பு

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாவச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நேற்று (06-08-2015) சாவச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

31-07-215 அன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களில் சிலரை பொலிஸார் கைது செய்து தடுத்து கடுமையாக அச்சுறுத்தினர்.

தேர்தல்விதி முறைகளைமீறினர் என சாவச்சேரி பொலிஸார் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை விடுத்திருந்தனர்.

அதேவேளை பிராச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்மாட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டது.

அதற்கு அமைவாக நேற்று (06-08-2015) காலை 9.00 மணியளவில் இருவரும் நீதிமன்றிக்கு சமூகமளித்தனர். அவ்வழக்கு பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Posts