- Friday
- November 21st, 2025
கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு...
பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 75 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம்...
யுத்தத்தின் இறுதி நாட்களில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட பொதுமக்கள் பலர் முன்னிலையில் வட்டுவாகலில் வைத்து அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனது கணவர் சுந்தரம் பரமநாதனும் இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவராவார். தற்போதுவரை அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இராணுவத்திடம் நேரடியாகஒப்படைக்கப்பட்ட...
கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக பல துறைகளின் பணிகள் முடங்கக்கூடும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன்...
காணாமல் போன எனது கணவர் தற்போது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது கணவரின் மரணச்சான்றிதழையும் பெற்றுவிட்டேன். எனவே, எனக்கு நட்டஈடு தாருங்கள் என்று, காணாமல் போன முஹமட் அஜ்மீன் என்பவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். காணாமல் போனார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறு நாட்கள் அமர்வு, கடந்த வெள்ளிக்கிழமை (11)...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேரிடம் 38 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு செல்லவிரும்புவேரை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி இந்திய பிரஜையொருவர், 8 பேரிடம் இருந்து...
ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் தம்மை இராணுவம் என அடையாளப்படுத்தியவர்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருச்த எனது மகனை இழுத்து சென்றதுடன் மறுநாள் காலை மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்து தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர். அந்த மூன்று பேரையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகத்தில் கண்டேன்' என, தாயாரான முத்துலிங்கம்...
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் சாட்சியமளித்தவர்களில் அதிகமானவர்கள், இராணுவமே தங்கள் உறவுகள் காணாமற் போவதற்கு காரணம் என சாட்சியமளித்துள்ளனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 235 பேர் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஒரே நேரத்தில்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க...
"கடந்த காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில்தான் பெரும்பாலான ஊடகர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்."- இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை, நாடாளுமன்ற விவாதம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில்...
வட பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் தோமஸ் சானொன் இன்று (14) இலங்கை வரவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் மான்பிரீத் சிங் ஆனந்தும் வரவுள்ளார் என...
இந்திய - இலங்கை மீனவர்கள் குறித்து இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து பேசுவதால் சரியான தீர்வு கிடைக்காது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இரு நாட்டு மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து இரு நாட்டு அரசியல்...
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் ரூ. 87.29 கோடி செலவில், 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை இந்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வவுனியா, அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோக்கத்தில் அதன் உள்கட்டமைப்பு...
தற்சமயம் ஜி.சீ.ஈ. (சாதாரணதரப்) பரீட்சை நடந்துக் கொண்டிருக்கும் பரீட்சை நிலையங்களில் அதிரடிப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு 600 ற்கு மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்ட அதிரடிப்படையொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களம், வலயக்கல்விக் காரியாலயங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த அதிரடிப்படையில் பங்கேற்கவுள்ளதாகவும், வினாப்பத்திரங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இணைப்பு மத்திய நிலையங்களில் 24 மணித்தியாலங்களும், பரீட்சை நடக்கும்...
யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சாவகச்சேரி - மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி புகையிரத கடவையின் சமிஞ்ஞையை கவனிக்காது புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த முச்சக்கர...
காணாமற்போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ். மாவட்டத்திற்கான மற்றுமொரு அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெறுகின்றது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் ஆணைக்குழு 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 1620 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. நல்லூர், யாழ்ப்பாணம், கரவெட்டி, மருதங்கேணி,...
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில், வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து வடக்கு,...
காணாமற்போன ஒருவரைக் கண்டறிவதற்காக பலாலி மற்றும் அச்சுவேலி இராணுவ முகாம்கள் சோதனையிடப்பட வேண்டும் என ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன்...
இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
