யாழ்.குடாநாட்டுக்கு நேற்றய தினம் வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
கடந்த சில தினங்களாகவே அதிகளவிலான சுற்றுலா பயணிகள் யாழ்.கோட்டை, ஆரியகுளம் நாக விகாரை, நல்லூர் கந்தசுவாமி ஆலயம், யாழ்.நகரப் பகுதிகளில் காணப்பட்டனர். இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினமான நேற்று வழமையை விட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.
பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறைக் காலம் என்பதால், எதிர்வரும் 1ம் திகதி வரையில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.