Ad Widget

நாடு முழுவதும் இன்று காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி

சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9.25 மணி முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அத்துடன் நாளையதினம் 25 மாவட்டங்களிலும் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் மற்றும் விழிப்பூட்டும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையால் சுமார் 35,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts