அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! – அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன்

அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. தீர்வு...

நிலாவெளியில் மீட்கப்பட்ட சடலம் புலி உறுப்பினருடையதா?

திருகோணமலை – நிலாவெளி கடற்கரையில் மீட்கப்பட்டிருந்தவரின் சடலம், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவராக இருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துவதாக தமிழக கியூ பிரிவு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கடந்த ஆறாம் திகதி மீட்கப்பட்ட இந்த சடலம், சென்னையைச் சேர்ந்த பூமிதுரை என்ற ஒரு வாடகை வாகன...
Ad Widget

சைபர் குற்றம் : இலங்கையில் ஆண் சிப்பாய்களை மிஞ்சும் பெண் சிப்பாய்கள்

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் கடமையாற்றும் ஆண்கள் மட்டுமன்றி பெண் சிப்பாய்களும் சைபர் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அண்மையில் கொழும்பின் தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் 23வயதான யுவதியொருவர், தனது முன்னாள் காதலனான விமானப்படை பொறியியலாளர் ஒருவர் தனது நிர்வாணப் படங்களை வைத்து மிரட்டிக் கொண்டிருப்பதாக குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதா? அரசு உறுதி வழங்கவில்லை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஒருபோதும் அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பெரும் குற்றச்சாட்டுக்கள் இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கோ அல்லது புனர்வாழ்வுக்கு அனுப்புவதற்கோ அரசாங்கம் இணங்கியிருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு புலி சந்தேகநபர்களை விடுவிப்பதாக நாம் ஒருபோதும் உறுதிமொழி...

காணாமல் போனோர் ஆணைக்குழு விசாரணை : துயரம் தாங்காது மயங்கி விழும் சாட்சிகள்!

காணாமல் போனோர் ஆணைக்குழு தமது விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்திவருகின்ற நிலையில் இன்றைய தினம் சாட்சியளிக்கவந்த பாதிக்கப்பட்ட பலர் துயரத்தை கூறிக்கொண்டிருந்த வேளையில் மயங்கிவிழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இரண்டாவது நாள் அமர்வுகளை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை தொடர்ந்துள்ளது. இன்றைய தினம் பலர்...

கடத்தப்பட்ட எனது மகனை ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர்

திருமணமாகி 15 நாளாகிய எனது மகனை 2006-09-10 திருநெல்வேலியில் உள்ள எனது வீட்டிற்கு அதிகாலை 1.30 ற்கு வந்த குழுவினரால் கடத்தப் பட்டார். 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொள்ளுப்பிட்டியில் ஈ.பீ.டீ.பி உறுப்பினர்களுடன் எனது உறவினர்கள் கன்டனர் என தந்தையார் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற காணாமல் போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி...

நிவாரணங்களை ஏற்க இந்தியத் தூதரகம் மறுப்பு!

தமிழகத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வட மாகாணசபை மற்றும் ஏனைய சில அமைப்புக்களினால் திரட்டப்பட்ட பணம் மற்றும் பொருள் உதவிகளை ஏற்றுக்கொள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. தமிழக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிராலய...

யாழ். றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் பொம்மைவெளி பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்!

யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ். பொம்மைவெளிப் பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அண்மையில் யாழ்ப்பாணமெங்கும் பரவலாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தப் பிரதேச மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதியில் தொற்றுநோய்கள் மற்றும் தோல் நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து...

தலையாட்டியை வற்புறுத்தி மகனை இராணுவம் பிடித்துச் சென்றது

நாவற்குழி கிழக்கு கோவிலாக் கண்டி பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு 7மாதம் 19ஆம் திகதி எமது பகுதியில் 5 கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பலரை அழைத்துச் சென்றனர். பிரதேச சபையில் 4 தலையாட்டிகளை நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது ஆண்களை ஒரு வரிசையாகவும், பெண்களை ஒரு வரிசையாகவும் நிற்க வைத்து தலையாட்டியை...

‘மகளின் குடும்பம் வேண்டும்’

எனது மகளின் குடும்பம் வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களின் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதை உறவினர்கள் பலர் கண்டும், பயம் காரணமாக சாட்சி சொல்ல அவர்கள் முன்வரவில்லையென நல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் இளங்கோதை சாட்சியமளித்தார்;. அதற்குப் பதிலளித்த காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் 'பரணகம, வட்டுவாகல் பகுதியில் காணாமற்போன மக்களுக்கு என்ன...

எனது கணவனும், மகனும் இராணுவ உடையில் நின்றனர்! இணையத்தளத்தில் பார்த்தேன்! – தாய் ஒருவர் சாட்சி

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைத்த எனது கணவனும் மகனும் உயிருடன் இருக்கின்றார்கள். யாழ்.வலி,வடக்கு படைமுகாமில் அவர்கள் இராணுவ உடையில் நின்று கொண்டிருப்பதை தமிழ்வின் இணையத்தளம் புகைப்படமாக வெளியிட்டிருந்தது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். சண்முகநாதன் கௌரி என்ற குறித்த தாய் சாட்சியமளிக்கையில், 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த...

பாடசாலை சீருடைத் துணிகள் கையிருப்பில் இல்லையாம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம்...

யுவதிக்கு ஆபாச மிரட்டல்: இளைஞனுக்கு விளக்கமறியல், மாணவனுக்கு பிணை

யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், அதற்கு உடந்தையாகவிருந்த 17 வயது பாடசாலை மாணவனை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார். தென்மராட்சியைச்...

வடக்கில் 2 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், நேற்று தெரிவித்துள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டளவில் இலங்கையை வெடிபொருட்கள் அற்ற நாடாக மாற்றுதே தமது இலக்கு எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. "இலங்கையை முற்று முழுதாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக 2020ஆண்டளவில் மாற்றுவதே எமது இலக்கு"...

யாழ். பொதுநூலகத்தில் இந்திய முனையம் திறந்து வைக்கப்பட்டது!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தை திறந்து வைத்தார். யாழ். மாநகர ஆணையாளரர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார, யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், வடக்கு...

பெப்ரவரி வரை மழை தொடரும் என்கிறது ஐ.நா.!

தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ...

நீக்குவதாகக் கூறிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை எவ்வாறு விசாரிக்கலாம்?

பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐ.நா மனித...

200 பேரின் சாட்சியங்கள் பதிவு; இன்று இரண்டாம் நாள் விசாரணைகள் ஆரம்பம்

காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதேவேளை அதன் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் மீண்டும் இடம்பெறவுள்ளது. நேற்றைய அமர்வில் நல்லூர்...

சர்வதேச மனித உரிமைகள் தினநிகழ்வு

வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்

உயர்தரம் படித்த அனைவரும் இனி வைத்தியராவதற்கு படிக்கலாம்!

உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...
Loading posts...

All posts loaded

No more posts