Ad Widget

யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவில் யுத்த காலத்தில் கைவிடப்பட்ட வாகனங்களுக்காக நட்டஈடு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்களை மக்கள் கைவிட்டுச் செல்ல நேரிட்டது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பொது மக்கள் கைவிட்டுச் சென்றிருந்த ஆயிரக்கணக்கான வாகனங்களை பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.

முல்லைத்தீவின் அநேகமான இடங்களில் இந்த வாகனங்கள் குவிக்கப்பட்டிருந்தன.

சில இடங்களில் இராணுவத்தினரின் அனுமதியுடன் மாவட்ட செயலகத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து மக்கள் வாகனங்களை பெறுவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் உரிய ஆவணங்களை காண்பித்த பலருக்கு அவர்களுடைய வாகனங்கள் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குவிக்கப்பட்டிருந்த வாகனங்கள் உதிரிப்பாகங்களாகவும் இரும்பிற்காகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விற்கப்படுவதாக அறியமுடிகின்றது.

வாகன விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தமக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என இறுதி யுதத்தத்தில் வாகனங்களை விட்டுச் சென்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts