Ad Widget

தனியார் துறையினரின் சம்பளம் தொடர்பில் விசேட சட்டம் அறிமுகம்

தனியார் துறையில் பணிபுரியும் சேவையாளர்களின் ஆகக் குறைந்த வேதன தொகை தொடர்பில் சட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்ட மூலத்துக்கு அனுமதியினை பெற்றுக் கொள்வது தொடர்பில் வேலைப் பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள் வருமாறு

01. பசுமையான மீன்பிடி துறைமுக வேலைத்திட்டம்

தென் மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான மீன்பிடி துறைமுகமான மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை பசுமையான மீன்பிடி துறைமுகமாக மாற்றுவதற்கு வேலைத்திட்டத்தினை 30.4 மில்லியன் தேசிய முதலீட்டின் மூலம் முன்னெடுக்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. சுற்றாடல் கூருணர்வுமிக்க நிலப் பகுதிகளில் உயிர் பல்வகைமைப் பாதுகாப்பின் மேம்பாடு மற்றும் சுற்றாடல் முறைமைச் சேவைப் பராமரிப்பு

இலங்கையில் சுற்றாடல் கூருணர்வுமிக்க நிலப் பகுதிகளில் உயிர் பல்வகைமைப் பாதுகாப்பின் மேம்பாடு மற்றும் சுற்றாடல் முறைமைச் சேவைப் பராமரிப்பு வேலைத்திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உலக சுற்றாடல் வசதியின் மூலம் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. எனவே குறித்த வேலைத்திட்டத்தை 2.62 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் அடிப்படையாக வைத்துக் கொண்டு இரு முன்னோடி பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஐக்கிய நாடுகள் சபையின் மாற்று திறனாளிகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையினை அங்கீகரித்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனத்தின் மூலமும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச உறுதிப்பிரமாணத்திற்கு இணங்கவும் மாற்று திறனாளிகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை 2007ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது. எனவே குறித்த ஒப்பந்தத்தை பயனுள்ள முறையில் செயற்படுத்த சமூக வலுவூட்டல் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. 1964 ஆம் ஆண்டு 122 ஆம் இலக்க தொழில்வாய்ப்புக் கொள்கை தொடர்பான சர்வதேச தொழில் தாபனத்தின் சமவாயம் பற்றிய முன்மொழியப்பட்ட ஏற்றுக்கொள்கை

சர்வதேச தொழில் தாபனமானது, 1964 ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புக் கொள்கை மீது 122 ஆம் இலக்க சமவாயமும் அதனுடன் தொடர்பான 122 விதப்புரையினையும் கைக்கொண்டிருந்தது. தொழில் வாய்ப்பினை மேம்படுத்துவதற்கான நியமங்களை அதிகரிப்பதற்கான சர்வதேச தொழில் தாபனத்தின் பணிப்பானை அதனது 1 யாப்பிலிருந்து வெளிப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இலங்கை தேசிய மனித வளங்கள் மற்றும் தொழில் வாய்ப்புக் கொள்கை முழுமையான, பலனுள்ள மற்றும் சுதந்திரமான தெரிவு செய்யப்பட்ட தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப அடித்தளம் இட்டது.

எனவே குறித்த பலனுள்ள 1964 ஆம் ஆண்டு 122 ஆம் இலக்க தொழில்வாய்ப்புக் கொள்கை தொடர்பான சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் சமவாயத்தை செயற்படுத்த சமூக வலுவூட்டல் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. மத்தியஸ்தத்திற்காக கட்டாயமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டிய பிணக்குகளின் நிதி எல்லையை உயர்த்துதல்

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் மூலம் இந்நாட்டில் பிணக்குகளை தீர்க்கும் செயற்பாடொன்றாக மத்தியஸ்த சபைகள் தாபிக்கப்பட்டது. குறித்த சட்டத்தின் 07 (அ) பிரிவின் மூலம் பெறுமதி 25,000 ரூபாவை விஞ்சாத அல்லது அசைவற்ற தேனங்கள் அல்லது கடன் நட்டங்கள் அல்லது கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பிணக்குகள் கட்டாயமாக மத்தியஸ்தத்திற்காக ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமென காட்டப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் திருத்தச் சட்டத்தின் மூலம் அக்கட்டாய எல்லை 250,000 ரூபா வரை உயர்த்தப்பட்டது. எனினும் காலத்தின் தேவைக்கேட்ப குறித்த தொகையை 500,000 ரூபா வரை உயர்த்த நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவளினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்காக விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு முறையை வழங்குதல், இணைத்தல் மற்றும் அதிகார செயல்முறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்காக விமானப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு முறையை வழங்குதல், இணைத்தல் மற்றும் அதிகார செயல்முறையை செயற்படுத்த தேவைப்படுகின்ற 320 மில்லியன் ரூபாவுக்காக விலைமனுக்கோரலுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையை விரிவுபடுத்தும் திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல்

நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையை விரிவுபடுத்தும் திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கேள்வி சபையின் அவதானிப்புக்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இணங்க வழங்குவதற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையிலான இளைஞர்கள் அபிவிருத்தி சார் புரிந்துணர்வு உடன்படிக்கை முன்மொழிவு அமுலாக்கம்

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளவிருக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பிரதமர் நவாஸ் ஸரீப் இனால் இலங்கை பயணத்தின் போது இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் பல்வேறு ஒப்பந்தங்களில் கைச்சாதிட தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வேலை பார்க்கும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கௌரவ ஹர்ஷ டி சில்வா ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. திஸ்ஸமஹாராம நீர் வழங்கல் திட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி ஒப்பந்தத்தினை வழங்கல் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் யோசனையாக 393 மில்லியன் ரூபா செலவில் திஸ்ஸமஹாராம நீர் வழங்கல் திட்டத்தினை முன்னெடுக்க 2015.11.18 அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தின் கீழான நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் விடயங்களுக்கு கீழ் வரும் வேலைத்தொகுதிகளை குறித்த சபையின் ஊடாக மேற்கொள்வதற்கும் மற்றைய பகுதிகளை நிர்மானத்துறை அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனத்திற்கு ஓப்படைப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு

2016 வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இணங்க தனியார் துறையினருக்கு வேதன உயர்வு குறித்து தயாரிக்கப்பட்ட சட்ட மூலம் தொடர்பில் அனுமதியினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக வேலைப் பார்க்கும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Posts