Ad Widget

ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் யாழில்

காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை யாழில் இரண்டு விசாரணை அமர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன், அந்த அமர்வுகள் இடம்பெற்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் எதிர்வரும் அமர்வு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.

மீண்டும் ஜனாதிபதியால் அந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயர் அதிகாரி ஒருவரிடம் அத தெரண வினவியதற்கு,

அந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அந்த ஆணைக்குழுவிற்கு அரசு சாராத நிறுவனங்களினால் அழுத்தங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

Related Posts